இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைப் போலவே இருக்கும் ஒருவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோடில் இம்ரான் கானைப் போலுள்ள ஒருவர் ஆட்டோ ரிக்‌ஷா சவாரி செய்து கொண்டிருந்தார். இந்த சவாரியின் வீடியோ வைரலாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வீடியோ வைரலாகிய சில நிமிடங்களிலேயே அந்த நபர் பிரபலமாகி விட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்ரான் கானின் (Imran Khan) பல ரசிகர் மன்ற உறுப்பினர்களும் பல இணையவாசிகளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தோற்றத்தைக் கொண்டுள்ள அந்த நபரின் வைரல் வீடியோவை பல சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.


இணையத்தை கலக்கி வரும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



ALSO READ: பாகிஸ்தான் சிந்தில் சுதந்திர பேரணியில் இடம் பெற்ற பிரதமர் மோடியின் போஸ்டர்கள்..!


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இந்த இளைஞருக்கு உள்ள உருவ ஒற்றுமை விசித்திரமானதாக உள்ளது.


இண்டர்நெட் என்பது தகவல்களின் தொகுப்பாகும். நாம் பல விஷயங்களை இங்கிருந்து கற்றுகொள்கிறோம். அதே நேரத்தில் பல விசித்திரமான வித்தியாசமான விஷயங்களையும் நாம் இங்கே காண முடிகிறது. பல பிரபலங்களின் உருவத்தை ஒத்திருக்கும் பலர் இப்படி இணையத்தில் தோன்றி அவர்களும் பிரபலமாவதுண்டு. அந்த வகையில் தான் தற்போது இம்ரான் கான் போலுள்ள இந்த நபரும் நொடிகளில் பிரபலமாகியுள்ளார்.  


சமீபத்தில் நீலக்கண்களைக் கொண்ட தேநீர் விற்கும் நபர் ஒருவர் பிரபலமாகி இணையத்தில் வலம் வந்தார். ஒரு பிரபலத்தைப் போலவே காட்சியளிக்கும் ஒரு நபரை இணய வாசிகள் (Netizens) கண்டிருப்பது இது முதன் முறையல்ல. இதற்கு முன்னரும் இப்படிப்பட்ட பலர் இணையத்தின் மூலம் வெளி உலகின் பார்வையை ஈர்த்துள்ளார்கள்.


தற்போது பிரபலமாகியுள்ள இந்த நபர் இம்ரான் கானின் இள வயதை, அவர் கிரிக்கெட் (Cricket) விளையாட்டில் உச்சியில் இருந்த காலத்தை நினைவுபடுத்துகிறார்.


இம்ரான் கான், ஆகஸ்ட் 17, 2018 அன்று, பாகிஸ்தானின் (Pakistan) 22 வது பிரதமரானார். அவர் ஆகஸ்ட் 18, 2018 அன்று பதவியேற்றார்.


ALSO READ: OMG!! கொரோனா தொற்றின் அச்சத்தால் 3 மாதங்கள் Airport-ல் மறைந்திருந்த நபர் கைது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR