Wild Buffalo Hunt: காட்டுப்பூனையை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்
Viral Hunt Video: காட்டுப்பூனை தூக்கி பந்தாடிய காட்டெருமையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இப்படியும் நடக்குமா என உறைய வைக்கும் அதிரடி தாக்குதல் வீடியோ
காட்டெருமை மூர்க்கத் தாக்குதல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வினோதமான விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது.
வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் சமீப காலமாக விலங்குகளின் வீடியோவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்தவகையில் இந்த மிகவும் வித்தியாசமான வீடியோ பதற வைக்கிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவில் காட்டெருமை மற்றும் காட்டுப் பூனை இரண்டின் சக்தியையும் பார்க்கலாம்
காட்டிற்கு ராஜா என சிங்கத்தை சொன்னாலும் சிங்கத்தையே தாக்கும் விலங்குகளும் உண்டு. வனவிலங்குகளுக்கு இடையே சண்டை எழுவது சகஜம். அதுவும், ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் விலங்குகளின் வீடியோக்களையும் பார்க்கலாம், அதேபோல, எதிர்பாராமல், தாக்கி வெற்றி பெறும் விலங்குகளைப் பார்க்கலாம்.
காண்போரை திகைப்புக்குள்ளாக்கும் காட்டெருமையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. மெதுவாக வந்து, அமைதியாக படுத்திருக்கும் காட்டுப்பூனையை மூர்க்கத்தனமாக தூக்கியடிக்கும் காட்டெருமையின் பலம் அசர வைக்கிறது.
சுற்றுலா பயணிகள் செல்லும்போது நடந்த இந்த சண்டையை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால் எப்போது? எங்கு எடுத்தது என்ற விவரம் தெரியவில்லை. இருந்தாலும், காட்டுப்பூனையை தாக்கும் காட்டெருமையின் வீரியமும் ஆச்சரியப்படுத்துகிறது.
மேலும் படிக்க | யானையிடம் கேவலமாக பல்பு வாங்கிய சிங்கம்: வீடியோ வைரல்
உண்மையில் அந்த காட்டுப்பூனை தனியாக படுத்திருப்பதைப் பார்த்தால், அது பலமில்லாமல் இருப்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல, காட்டெருமையின் தாக்குதலில், ஒரே வீச்சில் பந்து போல பறந்து கீழே விழும்போது அதன் நிலையையும் பார்க்க முடிகிறது.
நோயால் பாதிக்கப்பட்டோ அல்லது, வயதான காரணத்தாலோ அந்த காட்டுப் பூனை தனியாக இருந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு உள்ளனர். எது எப்படி இருந்தாலும், வனத்தில் வாழும் மிருகங்களின் வாழ்க்கையில், கரணம் தப்பினால் மரணம் என்பது எழுதப்படாத விதி தானே?
மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ