வாரத்தில் ஒருநாள் நமக்கு பிடித்த ஹோட்டல்களில், நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் என எண்ணுவோம். அப்படி செல்வதும் உண்டு. ஆனால், சிங்கத்துடன் அமர்ந்து டின்னர் சாப்பிட வேண்டும் என யாராவது இதுவரை யோசித்திருப்பார்களா? என தெரியவில்லை. ஒரு பெண்ணுக்கு அப்படியொரு வித்தியாசமான ஆசை இருந்துள்ளது. அதனை செய்து காட்டியும் இருக்கிறார். அவர் சிங்கத்தோடு அமர்ந்து இரவு டின்னர் சாப்பிடும் வீடியோ இன்ஸ்டாகிராமிலும் பகிரப்பட்டிருக்கிறது.  கொஞ்சமும் பயம் அந்த பெண்ணுக்கு இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: சிங்க நடைங்கிறது இது தானா... மெயின் ரொட்டில் வாக்கிங் போகும் சிங்கம்... பீதியில் மக்கள்!


ஏனென்றால், சிங்கம், புலி, யானை, சிறுத்தை போன்ற மிக பயங்கரமான விலங்குகளை கேள்விபட்டாலே பயம் நெஞ்சுக்குள் ஏற்படும் நிலையில், அந்த வீடியோவில்  இளம் பெண் சிங்கத்துடன் கூலாக அமர்ந்து ஒரே தட்டில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் யாராக இருந்தாலும் ஒரு நொடி திக்கென்று இருக்கும்.


இந்த வீடியோவை ராக் ஜூ என்கிற இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ஒரு பெண்ணும் சிங்கமும் மிக மகிழ்ச்சியாக உணவை ஒரே தட்டில் சாப்பிடுவது போன்று காட்டப்பட்டுள்ளது. மேலும், இருவரும் அருகருகே தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். சிங்கம் அதன் மாமிசத்தை எப்போதும் போல பயங்கரமான பாணியில் சாப்பிடுகிறது. அப்பெண்ணும், சிங்கத்துடன் அமர்ந்து மகிழ்ச்சியாக வறுத்த இறைச்சியை சாப்பிடுகிறார்.



இருவருக்குமான உணவுகள் ஒரு பெரிய தட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவை பதிவிட்ட ராக் ஜூ என்கிற பக்கத்தினர். அந்த வீடியோவிற்கு கேப்ஷன் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில், “பூமியில் வேறு எந்த இடத்திலும் இதைச் செய்ய முடியாது. இங்கு மட்டும் (ராக் மிருகக்காட்சிசாலையில்) இது நடப்பது சாத்தியம்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வைரல் வீடியோ ஜூலை 4 அன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதுவரை, இந்த வீடியோவை 4 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பேர் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு பலர் லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | செல்ல நாய்க்காக ராட்சத கரடியுடன் மோதிய நபர்: புகழ்ந்துதள்ளும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ