செல்ல நாய்க்காக ராட்சத கரடியுடன் மோதிய நபர்: புகழ்ந்துதள்ளும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Scary Dog Video: இந்த வீடியோவை பார்க்க மிக ஆச்சரியமாக உள்ளது. இந்த அசாதாரண சம்பவம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 24, 2023, 10:07 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @hellodutch என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ அந்த நபரின் விடாமுயற்சியையும், தனது செல்ல நாயின் மீது அவர் கொண்டுள்ள பாசத்தையும், அவரது தைரியத்தையும் காட்டுகிறது.
  • இது ஆன்லைனில் வேகமாக பரவி வருகின்றது.
செல்ல நாய்க்காக ராட்சத கரடியுடன் மோதிய நபர்: புகழ்ந்துதள்ளும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

நாய்கள் மிகவும் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. வீட்டில் நாய் உள்ளவர்கள் அவற்றையும் வீட்டின் உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். நாய்களும் வீட்டில் உள்ள நபர்களுடன் அளவு கடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பும் கிடைக்கின்றன. 

சில நேரங்களில், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தங்கள் அன்புக்குரியவற்றை பாதுகாக்க யாரும் நினைத்துக்கூட பார்க்காத செயல்களை கூட செய்வதுண்டு. இதில் பலர் தங்கள் உயிரையே பணயம் வைத்துகூட அந்த விலங்குகளை காப்பதுண்டு. இப்படிப்பட்ட சம்பவங்கள் நமக்கு பெரிய அளவிலான ஆச்சரியத்தை அளிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்க மிக ஆச்சரியமாக உள்ளது. இந்த அசாதாரண சம்பவம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வருகிறது. ஒரு பெரிய கரடியிடம் இருந்து தனது செல்ல நாயைக் காப்பாற்ற ஒரு நபர் அசாத்தியமான தைரியத்தை வெளிப்படுத்துவதை இந்த அதிர்ச்சி வீடியோ காட்டுகிறது. இதை பார்த்தால் நம் உடல் முழுதும் சிலிர்க்கின்றது. 

நாயை காப்பாற்ற கரடியிடம் போராடிய நபர்

ஒரு நபரும் அவருக்கு செல்லமான வளர்ப்பு நாய்க்குட்டியும் தங்கள் வீட்டு முற்றத்தில் ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டு இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது திடீரென்று, ஒரு பெரிய கரடி நாய்க்குட்டியைத் தாக்க முற்றத்தை நோக்கி வருகின்றது. அதை அந்த நபர் பார்த்து விடுகிறார். பின்னர் ஒரு கணமும் தாமதிக்காமல் அந்த நபர் செயலில் இறங்குகிறார். அவர் நாயை காப்பாற்ற கரடியின் மீது பாய்கிறார்.

கரடி மிக பெரியதாக உள்ளது. ஆனால் அந்த நபர் சிறிதும் அச்சப்படவில்லை. தன் நாயை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே அவரிடம் உள்ளது. நாயை ஆபத்திலிருந்து தூரமாக தள்ளிவிட்டு, அவர் முழு பலத்தை பயன்படுத்தி அந்த கரடியை தள்ள முயற்சிக்கிறார். இதில் வெற்றி பெறும் அவர் பயமின்றி கரடியைத் தள்ளிவிட்டு, கரடி மீண்டும் நுழைவைத் தடுக்க உடனடியாக ஒரு சோபாவை இழுத்து வாயில் அருகில் போடுகிறார். தனது அச்சத்தை விலக்கி, தைரியத்துடன், துவண்டு போகாத முயற்சியால், அந்த நபர் தனது செல்ல நாயை எந்தவித காயமும் இன்றி காப்பாற்றினார்.

மேலும் படிக்க | காரின் என்ஜினுக்குள் செட்டிலான மலைப்பாம்பு வீடியோ வைரல்

இணையத்தில் புயலை கிளப்பும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dutch (@hellodutch)

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @hellodutch என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ அந்த நபரின் விடாமுயற்சியையும், தனது செல்ல நாயின் மீது அவர் கொண்டுள்ள பாசத்தையும், அவரது தைரியத்தையும் காட்டுகிறது. இது ஆன்லைனில் வேகமாக பரவி வருகின்றது. இதற்கு இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களும் 2 மில்லியன் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அந்த நபரின் அசைக்க முடியாத துணிச்சலைப் பாராட்டி நெட்டிசன்கள் கருத்துப் பகுதியை நிரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | பால் கறக்கும்போது முகத்தில் விழுந்த சாணி: வாலை பிடித்து கடித்த பெண் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News