கைக்குழந்தையுடன் பயணித்த தாய்க்கு இடமளிக்க மறுத்த பயணிகள்!
ஓடும் ரயிலில் நின்றபடியே தன் குழந்தைக்கு பாலூட்டி வந்த தாய்க்கு அந்த ரயிலில் பயணித்த பயணிகள் உட்கார இடமளிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
லண்டன்: ஓடும் ரயிலில் நின்றபடியே தன் குழந்தைக்கு பாலூட்டி வந்த தாய்க்கு அந்த ரயிலில் பயணித்த பயணிகள் உட்கார இடமளிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
லண்டனை சேர்ந்த பெண்மனி ஒருவர் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கைகுழந்தையுடன் ரயில் நின்றபடியே பயணித்த சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது...
"ஒரு நிரம்பிய பயணிகள் ரயிலில், லண்டனில் இருந்து என் வீட்டிற்குச் சென்றபோது தான் இந்த சம்பவத்தினை நான் சந்திக்க நேர்ந்தது. 6 மாதமே ஆன குழந்தைக்கு அவரது தாய் நின்றபடியே பாலூட்டி வந்தார். சுமார் 30 மணிநேரத்தில் 3 நிறுத்தங்களை சந்தித்தும் அந்த ரயிலில் யாரும் அந்த தாய்க்கு இடமளிக்க முன்வரவில்லை.
இருக்கையில் அமர்ந்திருந்த பலரும் என்னைப் பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டனர். ஒரு பெண்மனி என்னைப் பார்த்து சிறு புன்னகை மட்டுமே அளித்தால், 'சிரிப்பை நிறுத்திவிட்டு உனது சீட்டை தருகிறாயா?' என்று எனது மனத்துக்குள் கேள்வி எழுந்து மறைந்தது.
அப்போது அவளுக்கு அருகில் இருந்த மற்றொரு பெண், தன் புத்தகத்தின் மீது இருந்த பார்வையினை தன் பக்கம் திருப்பினால், உடனடியாக தனது இடத்தை எனக்கு அளிக்க எழுந்தால். அப்போது மற்றொரு பெண் அவரை மீறி விடைப்பெற்ற இடத்தினை அடைய முற்பட்டால். எனக்கு இடமளிக்க முன்வந்த பெண், தான் இந்த இடத்தை நின்றபடி குழந்தைக்கு பாலூட்டும் இந்த தாய்-க்கு அளிக்க விரும்பினேன் என குரல் கொடுத்தார்., ஆனால் இவரது குரலுக்கு செவி சாய்க்காத அந்த பெண்மணி தனது மொபைலின் இயர் போன்களை காதில் சொருகி மற்றொரு உலகிற்கு பறந்தால்.
யாருக்கு தெரியும், ஒருவேலை அந்த பெண் சமீபத்தில் கருவுற்று இருக்கலாம். ஒருவேலை அலுவலகத்தில் இருந்து பல சுமைகளுடன் கலைப்பாக வந்திருக்கலாம், ஒருவேலை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம், இல்லையேல் சொல்வதற்கு இயலாத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் அப்படி இருந்துவிடாதீர்...
எவ்வாறு இருப்பினும் அடுத்த முறை ரயில் பயணத்தில் கைக்குழந்தையுடன் வரும் ஒரு தாயினை கண்டால் அவருக்கு இடமளிக்க முன்வாருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்!