Luwak Coffee Price: இந்தோனேசியாவைச் சேர்ந்த லுவாக் காபி முழு உலகிலும் மிகவும் விலையுயர்ந்த காபியாகும். மேலும் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் இதனை குடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். நீங்கள் காபியை விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் லுவாக் காபி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சிறப்பு வகை காபி கொட்டை மட்டுமல்ல; இது காபி பீன்ஸ் தயாரிப்பதற்கான ஒரு சிறப்பு வழி ஆகும். சில நேரங்களில் ஒரு கிலோ லுவாக் காபி பீன்ஸ் 100 டாலர்கள் வரை மார்க்கெட்டில் விற்பனை ஆகிறது. இந்த லுவாக் காபி தயாரிக்க மக்கள் பச்சை காபி கொட்டைகளை எடுத்து, சிவெட் கேட்ஸ் என்று அழைக்கப்படும் சிறப்பு வகை பூனைகளுக்கு கொடுக்கிறார்கள், அவை பார்ப்பதற்கு பூனைகளைப் போலவே இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: பிளாட் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூவை திருடும் ஸ்விக்கி டெலிவரி பாய்!


பீன்ஸ் சிவெட்டின் வயிற்றின் வழியாகச் சென்று அவற்றின் மலத்தில் வெளியே வரும். இது நிகழும்போது, ​​பீன்ஸ் சுவை வித்தியாசமாக இருக்கும். இந்த காபியை விரும்புபவர்கள், இது மிகவும் மென்மையான சுவை தருகிறது என்றும், ழக்கமான காபியைப் போல கசப்பாக இல்லை என்று கூறுகிறார்கள். பெரும்பாலான லுவாக் காபி பண்ணைகளில் இருந்து வரும் காபி பீன்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அங்கு சிவெட் கேட்ஸ் எனப்படும் பூனை கூண்டுகளில் வைக்கப்பட்டு இந்த பீன்கள் உணவாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சிவெட் கேட்ஸ் காபி கொட்டைகளை மட்டும் சாப்பிடுவதில்லை. அவை பழங்கள், பெர்ரி மற்றும் பூச்சிகளையும் சாப்பிடுகின்றன.



உலகம் முழுவதும் சிவெட் காபி அல்லது லுவாக் காபி மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. ஏனெனில் பூனையின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதால் மக்கள் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். பூனையின் மலத்தை சேகரித்து, அதை சுத்தம் செய்து பின்னர் அந்த பீன்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட காபியை விற்கிறார்கள். இந்த காபி ஆரோக்கியமானதாக கருதப்படுவதால் அதிக விலையில் விற்கப்படுகிறது. மேலும் பூனைகளை கவனித்துக்கொள்வதற்கும், காபி தரமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் மற்ற விஷயங்களுக்கும் கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன. வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்த காபியை குடிக்க விரும்புகிறார்கள். 


இந்தியாவில் கர்நாடகாவில் உள்ள கூர்க் கன்சோலிடேட்டட் கமாடிடீஸ் (சிசிசி) என்ற நிறுவனம் இந்த ஸ்பெஷல் காபியை தயாரித்து வருகிறது. முதலில், 20 கிலோகிராம் சிவெட் காபி என்ற ஒரு வகை காபியை தயாரித்தனர். இந்த ஃபேன்ஸி காபியை 'ஐன்மனே' என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர். காபி மட்டும் இன்றி இந்த நிறுவனம் மசாலா மற்றும் பிற பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். சிவெட் பூனைகள் வளர்க்கப்படும் இடத்திலிருந்து இந்த நிறுவனம் மலத்தை பெறுகிறது. இந்த பூனைகள் செர்ரி பழங்களுடன் சேர்ந்து இந்த பீன்ஸ்களை சாப்பிடுகின்றன. பின்னர் இந்த பழத்தை ஜீரணிக்கும்போது காபியின் சுவை மிகவும் தனித்துவமாக மாறுவதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஸ்கிப்பிங் ஆடும் ஆப்பிரிக்க இளைஞர்கள் - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ