சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஸ்கிப்பிங் ஆடும் ஆப்பிரிக்க இளைஞர்கள் - வைரல் வீடியோ

சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஆப்பிரிக்க இளைஞர்கள் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 18, 2024, 12:54 PM IST
  • ஆப்பிரிக்க இளைஞர்களின் வைரல் வீடியோ
  • உடலை வில்லாக வளைத்து ஸ்கிப்பிங் ஆடுகின்றனர்
  • சாகச இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரல்
சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஸ்கிப்பிங் ஆடும் ஆப்பிரிக்க இளைஞர்கள் - வைரல் வீடியோ title=

பசி, பஞ்சம் இருக்கும் இடங்களில் தான் திறமையும் கொட்டிக் கிடக்கும் என்பதற்கு இப்போது வைரலாகியிருக்கும் ஆப்பிரிக்க இளைஞர்களின் வீடியோவே சரியான உதாரணம். சிறுவனின் உடலை வில்லாக வளைத்து அதில் இளைஞர்கள் ஸ்கிப்பிங் ஆடும், வீடியோவை நீங்களும் பார்த்தால் நிச்சயம் பிரமித்துப் போவீர்கள். ஆம், வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் ஆப்பிரிக்க இளைஞர்களின் கால்பந்து திறமையையும் நீங்கள் பார்க்க முடியும். உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டாக இருக்கும் கால்பந்தை இந்த ஆப்பிரிக்க இளைஞர்கள் கடுமையான வறுமையிலும் சிறப்பாக ஆடுகின்றனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத இடத்தில் இருந்து கொண்டு சர்வதேச தரத்துக்கு நிகராக கால்பந்தை நுணுக்கமாக விளையாடுகின்றனர்.

மேலும் படிக்க | உடைந்து நொறுங்கிய கால்கள்... சோஷியல் மீடியாவில் சீன் போட இந்த தப்பை பண்ணதீங்க - வைரலாகும் வீடியோ

வைரலாகியிருக்கும் வீடியோவில் இளைஞர் ஒருவர் கால்பந்து ஆட, மற்ற இளைஞர்கள் அவர் கோல் போடாத வண்ணம் வந்து தடுக்க முயல்கின்றனர். ஆனால் அந்த திறமையான இளைஞர், தனக்கே உரிய கால்பந்து நுணுக்கத்துடன் கொஞ்சம் இயல்பான காமெடி உடல்பாவனையையும் கொண்டு வந்து எதிரே வருபவர்களிடம் இருந்து பந்தை லாவகமாக தட்டி பறித்து கொண்டு செல்கிறார். ஒருவராவது அவருடைய பந்தை எடுப்பார்களா? என்று பார்த்தால் ஒருவராலும் முடியவில்லை. கடைசியாக லாவகமாக தட்டிச் சென்ற பந்தை கொண்டு சென்று கோல் போடுகிறார்.

இதனையடுத்து உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் அந்த இளைஞருடன் அங்கிருந்த மற்ற இளைஞர்களும் சேர்ந்து கொள்ள உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டம் களைகட்ட, உட்சபட்சமாக சிறுவனின் உடலை வில்லாக வைத்து அதில் அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஸ்கிப்பிங் ஆடுகின்றனர். பார்ப்பதற்கே விந்தையை ஏற்படுத்தும் இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடைசியாக எல்லோரும் சேர்ந்து ஆடும் குத்து டான்ஸ் காண்போரின் கண்களுக்கும், இதயதுக்கும் விருந்தாக அமைகிறது. நீங்கள் இதுவரை இந்த வீடியோவை பார்க்கவில்லை என்றால், இங்கே பார்த்து ரசியுங்கள்.

ஆப்பிரிக்க இளைஞர்களின் வைரல் வீடியோ : 

மேலும் படிக்க  | Viral Video: பிளாட் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூவை திருடும் ஸ்விக்கி டெலிவரி பாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News