வைரல் வீடியோ: பார்ட்டியில் பாம்பு டான்ஸ் ஆடும் இளைஞனின் நடனம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அந்த பார்ட்டியில் இருப்பவர்கள் இயல்பான நடனங்களை ஆடும்போது, ஒருவர் மட்டும் பாம்பு நடனம் ஆடுவது வேடிக்கையாக இருக்கிறது. மகுடி ஊதலப்பா! ராப் சாங் தான் ஓடுது! ஏன் பாம்பு டான்ஸ் ஆடற? கலாய்க்கும் நெட்டிசன்களின் கமெண்டால் இன்ஸ்டாகிராம் பக்கம் கலகலக்கிறது. பார்ட்டிக்கு வந்தோமா டான்ஸ் ஆடினோமா, சாப்பிட்டோமா போனோமா என்று இருந்தால் அது போரடிக்காதா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்ட்டிகள், திருமணங்கள் அல்லது திருமண வரவேற்பு, மாப்பிள்ளை அழைப்பில் நடனமாடும் இந்திய ஆண்கள் அதிகம் பேர் உள்ளனர். விதவிதமாக டான்ஸ் ஆடினாலும், தங்கள் விருப்பத்துக்கு குத்துப் பாட்டுக்கும், சூப் சாங் எனப்படும் வித்தியாசமான பாடல்களுக்கும் நடனமாடுவது இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.


ஆனால், பாம்பு போல, வளைந்து நெளிந்து, ஜெயமாலினி போல ஆடும் ஆண்களைப் பார்ப்பது அபூர்வம்தான். அப்படி ஒரு அபூர்வ டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


மேலும் படிக்க | பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்: வியப்பில் நெட்டிசன்கள், வீடியோ வைரல் 


வைரலாகும் பாம்பு டான்ஸ் ஆடும் இளைஞரும், அவரை கட்டுப்படுத்த முயலும் இளைஞரின் முயற்சிகளுக்கும் லட்சக்கணக்கான லைக்குகள் கிடைத்துள்ளன. அந்த பாம்பு டான்ஸ் பார்க்க நீங்க ரெடியா?



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில்‘official_viralclips’ என்ற பக்கத்தால் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகள் மற்றும் விருப்பங்களைப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | பல் தேய்க்கும்போது இந்த பந்தா தேவையா? பாம்புடன் சிறுமி அடிக்கும் லூட்டி!!


குடிபோதையில் தனது கட்டுப்பாட்டை மீறி, பாம்பு நடனம் ஆடும் நண்பரைக் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் நண்பரின் முயற்சியை அனைவரும் பாரட்டுகின்றனர். உண்மையில், பாம்பு போல நடனமாடும் மனிதரைப் பார்த்தால் அவருக்கு வலிப்பு வந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.


ஆனால் அவர் குடிபோதையில் இருப்பது அவரது நண்பருக்குத் தெரியும் போல... அதனால் தான் அவர் முகத்தில் பதட்டம் இல்லாமல், வெட்கம் தெரிகிறது. நண்பேண்டா! என்று சொல்லி அனைவரும் கலாய்க்கும் இந்த வீடியோ நெட்டிசன்களை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.


வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதற்காக, நண்பரை இப்படியா பாடு படுத்துவது குடிமகனே?. இந்த வீடியோவுக்கு மகுடி மியூசிக் போட்டு கலாய்த்திருக்கிறார் பதிவிட்ட பயனர்.


இது பாம்பு டான்ஸா, இல்லை சாமி வந்து ஆடும் ஆட்டமா? என்றும் பலர் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் சரி, பாம்பு டான்ஸ் ஆடிய நண்பரை, அங்கிருந்து நகர்த்த முயன்ற நண்பர், இனிமேல் அவருடன் எங்காவது பார்ட்டிக்கு போவார் என்று நினைக்கிறீர்களா?


மேலும் படிக்க | ‘ப்பா..என்னா டிராபிக்கு’: சாலையை கடக்க தவிக்கும் பாம்பு, சிரிக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ