வழிபாடுகளில் பலவிதம்! 3500 கி.மீ சாஷ்டாங்க நமஸ்கார பயணம் ஒருவிதம்...
Different Way Of Worship: உலக நன்மைக்காக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் புனித பயணம் மேற்கொள்ளும் ராஜகிரி....
3500 கிலோமீட்டர் சாஷ்டாங்க பயணம் மேற்கொண்ட சிவ பக்தர் ஒருவர், 35 நாட்களில் ராமேஸ்வரம் சென்றடைந்து புனித பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். ராஜகிரி என்பவர், உலக நன்மைக்காக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் புனித பயணம் மேற்கொள்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜகிரி மகராஜ், சிவ பக்தரான இவர் உலக நன்மைக்காக உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் வரை 3800 கிலோ மீட்டர் இடைவெளியின்றி சாலையில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யும் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்.
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி முதல் தமிழ்நாடு ராமேஸ்வரம் வரை 3800 கிலோமீட்டர் இடைவெளி இல்லாமல் தரையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து உலக அமைதிக்காக புனித பயணம் மேற்கொண்ட அவர் தற்போது திருவண்ணாமலையில் புனித பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க | புதன் மகாதசை காலத்தில் புதனை வலுப்படுத்த செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜகிரி மகராஜ் சிவபக்தர் உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து ராமேஸ்வரம் வரை 3800 கிலோ மீட்டர் தூரம் கொண்ட புனித பயணத்தை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்து மீண்டும் அடையாளத்திற்கு ஒரு கல் வைத்து மீண்டும் சாஷ்டாங்கமாக விழுந்தபடி 3800 கிலோமீட்டர் புனித பயணத்தை மேற்கொண்டு தற்போது திருவண்ணாமலைக்கு புனித பயணம் வந்தடைந்தது.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலை வந்தடைந்தவர் தொடர்ந்து அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலின் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் மேற்கொண்டார். பிறகு அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டு செல்ல உள்ளார்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... தப்பிக்க சில பரிகாரங்கள்..!!
ராஜகிரி மகராஜ் என்கிற சிவபக்தரும், அவருடைய சகோதரரும் உதவிக்கு சைக்கிளில் இருவருக்கும் தேவையான உணவு பண்டங்கள் கொண்டு செல்கின்றனர், ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அவர்கள் சமைத்தும் சாப்பிடுகிறார்கள், சராசரியாக இவர்கள் ஒரு நாளைக்கு 8 கிலோ மீட்டர் தூரம் சாஷ்டாங்க நமஸ்கார புனித பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்த புனித பயணம் இன்னும் 35 நாட்களில் ராமேஸ்வரத்தை அடைந்து தனது பயணத்தை இவர் நிறைவு செய்ய உள்ளார் என்று கூறினார்.
மேலும் படிக்க | நவகிரக அதிதேவதைகள்: எந்த கிரகத்திற்கு எந்த அதிதேவதையை வணங்குவது நல்லது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ