சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... தப்பிக்க சில பரிகாரங்கள்..!!

சனி வக்ர பெயர்ச்சி 2024: ஜூன் 29 அன்று, சனி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையும். இஹனால், சில ராசிகளுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும். எனினும் சில பரிகாரங்கள் மூலம் சனியின் வக்ர பெயர்ச்சியினால் ஏற்படும் அசுபங்கள் குறையும்.

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான், பெயர்ச்சி ஆகும் போது மட்டுமல்ல, அதன் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ளலாம்.

1 /8

சனி வக்ர பெயர்ச்சி 2024:  வரும் ஜூன் 29ம் தேதி, சனிக்கிழமையன்று, சனி பகவான் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் 15 வரை வக்ர நிலையில் இருப்பார்.  இதனால் சுமார் 5 மாதங்களுக்கு சிக ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

2 /8

மேஷ ராசி: தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் முடிவுகளை சிந்தனையுடன் எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், எந்தவொரு பணப் பரிவர்த்தனையையும் தவிர்க்கவும். இல்லையெனில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.

3 /8

கடக ராசி: சனியின் வக்ர பெயர்ச்சி கடக ராசிகளுக்கு சாதகமாக இருக்காது எந்தவிதமான சர்ச்சைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவித கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும் இல்லையெனில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

4 /8

சிம்ம ராசி: வேலை செய்பவர்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வியாபாரிகள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக அவர்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள். 

5 /8

மகரம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் சனி வக்ர பெயர்ச்சியின் போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் தேவையற்ற தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கலாம்.

6 /8

சனிக்கிழமையன்று சனிதேவரை வணங்கி, 'ஓம் பிரான் ப்ரீன் பிரான் ச: சனிச்சராய நம' என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிப்பதால், சனி பகவானின் வக்ர பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபடாலாம். மேலும் தினமும் 'சனி ஸ்தோத்திரம்' பாராயணம் செய்யவும்.

7 /8

சனிக்கிழமையன்று, ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடைகள், பழங்கள், காலணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தானமாக வழங்கவும். உளுந்து, இரும்பு பொருட்கள், நல்லெண்ணெய் போன்றவற்றையும் தானம் செய்யுங்கள். எறும்புகளுக்கு தேன் மற்றும் சர்க்கரை அளிப்பதும் பலன் தரும்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.