புதுடெல்லி: கிரகங்கள் தங்கள் ராசியை அடிக்கடி மாற்றிக்கொள்வதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கள் ராசியை மாற்றினால் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் உண்டாகும். 2022 அக்டோபரில் ராசி மாற்றங்கள் ஏற்படுவது, பல அபரிமிதமான சுப யோகங்களை உருவாக்கும். 7 கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுவதனால், 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஒளிரப் போகிறது. ஆரோக்கியத்துடன், பெரிய அளவிலான பண ஆதாயங்களும் கிடைக்கும். இந்த பலன், 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபரில் எந்தெந்த கிரகங்கள் ராசியை மாற்றப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!


அக்டோபர் 2022 இல் கிரக பரிவர்த்தனைகள்  


மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: அக்டோபர் 16, 2022


கன்னி ராசியில் இருந்து 2022 அக்டோபர் 17 அன்று துலாம் ராசியில் நுழைகிறார் சூரியன் 


துலாம் ராசிக்குள் அக்டோபர் 18ம் தேதியன்று சுக்கிரன் பிரவேசிக்கிறார்


அக்டோபர் 23ம் தேதியன்று மகர ராசிக்கு சனி கிரகம் பெயர்ச்சியாகிறது


அக்டோபர் 26ம் தேதியன்று புதன் துலாம் ராசிக்குள் நுழைகிறது


மேஷத்தில் வியாழன்: அக்டோபர் 28, 2022


மகர ராசியில் சனி : அக்டோபர் 23, 2022


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் தீபாவளிக்கு பிறகு பிரகாசிக்கும்


கிரக மாற்றங்களின் விளைவால் அதிர்ஷ்டமான மாற்றத்தை சந்திக்கவிருக்கும் ஆறு ராசிகள் இவை.... இவற்றில் உங்கள் ராசியும் இருக்கிறதா?


மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு. உடல்நிலை நன்றாக இருக்கும், பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் திருப்தியான மனநிலை நிலவும்.  


மிதுனம்: திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். மனைவியுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும், கடுமையாக பேசுவதை தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் பயணம் செய்வது பலனளிக்காது. எனவே தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் மற்றும் நேர்மறையான அணுகுமுறையை வைத்திருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். தோல் சம்பந்தமான நோய்கள் தொல்லை தரும்.


சிம்மம்: இந்த ராசியின் அதிபதி சூரியன். எனவே, சூரியன் இரண்டாவது வீட்டைக் கடந்து சென்றால், அதை சுபமாக கருத முடியாது. அத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் மாதம் உங்களுக்கு கடினமாக இருக்கும். எனவே இந்த நேரத்தை நிதானத்துடன் செலவிட முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள், அடக்கமாக இருங்கள். கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும், உடல் நலனில் அக்கறை கொள்ளவும்.
 
துலாம்: அக்டோபரில் கலவையான செய்திகளைப் பெறுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு.  புதிய சொத்து, வாகனம் வாங்கலாம். புதிய முதலீடுகளையும் செய்யலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். அக்டோபரில் உங்களுக்கு சாலை விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.


விருச்சிகம்: அக்டோபர் மாதம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் சம்பாதிப்பீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.


கும்பம்: அதிகரிக்கும் செலவுகளால் கவலை அதிகரிக்கும். வீட்டில் பிரச்சனைகள் வரலாம். உடல்நலக் குறைவு பிரச்சனையை அதிகரிக்கும். மன உளைச்சல் அதிகரிக்கும். வேலை மாற விரும்புபவர்களுக்கு இந்தக் காலகட்டம் நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய காலம் இது.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ