ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும்  நிழல் மற்றும் பாவ கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு கிரகம் அக்டோபர் 30ஆம் தேதி மாலை 05.45 மணிக்கு மீன ராசியில் பிரவேசித்தது. ராகு இப்போது 18 மாதங்கள் மீனத்தில் இருப்பார். மீனத்தில் ராகு பெயர்ச்சி அடைந்துள்ளதால், 5 ராசிக்காரர்கள் 18 மே 2023 வரை கவனமாக இருக்க வேண்டும். ராகுவின் கெடுபலன்களால், இந்த 5 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்வில் அசுப பலன்களை உண்டாக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு பெயர்ச்சி 2023:  5 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள்


மேஷம்: ராகு சஞ்சாரத்தால் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேவையில்லாமல் அலைச்சல் ஏற்படுவதால் மனம் கலங்கலாம். இந்த நேரத்தில், வாயு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். நீங்கள் விரும்பத்தகாத செய்திகளைப் பெறலாம். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். ஏனென்றால் இவை பிரச்சனைகளை அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். 


கடகம்: ராகு சஞ்சாரம் உங்களுக்கு கலவையான விளைவுகளை ஏற்படுத்தும். வேலையில் தடைகள் வரலாம். இருப்பினும் சில காரியங்களில் வெற்றியும் அடைவீர்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் நீங்கள் ஏமாற்றம் அடையலாம். தாய் தந்தையரின் உடல் நலனில் (Health) அக்கறை காட்டுங்கள். அவர்களின் நோய் காரணமாக நீங்கள் கவலைப்படலாம். தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.


சிம்மம்: ராகுவின் ராசி மாற்றத்தால் உங்கள் ராசிக்காரர்களின் உடல்நிலை மோசமடையலாம். விவாத விஷயங்களில் நீங்கள் சிரமப்படுவீர்கள். நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, வெளியில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பது நல்லது. எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். மூதாதையர் சொத்துக்களால் வீட்டில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொறுமையுடன் வேலை செய்யுங்கள். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அரசு அதிகாரிகள் கவனத்துடன் செயல்படவும்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு வாங்கும் யோகம் பெற சுக்கிர ஸ்லோகம் சொன்னால் போதுமா?


கன்னி: ராகுவால் உங்கள் காதல் வாழ்க்கை பிரச்சனைகளை சந்திகக்லாம். இது உங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்கலாம், முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரம் மற்றொரு துணையுடன் தொடங்கலாம். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் மாமியார்களுடன் தகராறு ஏற்படலாம். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.


மீனம்: ராகுவால் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சோம்பேறித்தனத்தால் வேலை கெட்டுவிடுமோ என்ற பயமும் இருக்கும். சோம்பலை தவிர்க்கவும். முழுமையடையாத வேலை பற்றிய தகவல்களை வழங்க வேண்டாம். ரகசியமாக வேலை செய்து வெற்றிக்குப் பிறகு மக்களுக்குச் சொல்லுங்கள். கல்வி-போட்டியுடன் தொடர்புடையவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.  பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ