சனிப்பெயர்ச்சி 2023 விளைவு: ஜோதிடத்தின் படி, சனி தேவன் நீதியின் கடவுள் மற்றும் கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்குபவர் என்று அறியப்படுகிறார். சனி தேவன் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப பலனை கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. சனிபகவானின் அருளால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளைத்தையும் பெறுகிறார். அதேசமயம், சனிதேவரின் கோபம் அந்த நபரின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தி நிம்மதியை குலைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனிதேவர் மார்ச் 15 முதல் சதய நட்சத்திரத்தில் நுழைகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்து பஞ்சாங்கத்தின்படி, சனி தேவன் தற்போது கும்ப ராசியில் அமர்ந்து அக்டோபர் 17 வரை இந்த நட்சத்திரத்தில் இருக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழையும் போது சுப பலன்கள் கிடைக்கும். பெயர்ச்சி காலத்தின் போது அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கலாம். சனி இந்த நக்ஷத்திரத்தில் நுழைந்த பிறகு, இந்த ராசிக்காரர்கள் புதிய திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.  வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் இந்தக் காலகட்டத்தில் நிறைவேற்றப்படும். 


மேலும் படிக்க | வார ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை!


மிதுனம்


இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் பலன் பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு சனியின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. இப்போது அந்த இன்னல்கள் எல்லாம் தீர்ந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படும். சனிபகவான் இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களின் பயணங்கள் வெற்றியடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்து பொருளாதார நிலை வலுப்பெறும். எதிர்பாராத பண வரவும் நிதி நிலையை உயர்த்தும்


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு சதய நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த காலகட்டத்தில் கார்ப்பரேட் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் இடமாற்றம் பெறலாம். இது தவிர, வேலை தேடுபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி பண விஷயத்திலும் சாதகமாக இருக்கும்.


துலாம்


இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் தொழிலில் சுப பலன்கள் கிடைக்கும். பெயர்ச்சி காலத்தின் போது, ​​இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வேலைக்கான அங்கீகாரம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அவர்கள் நிதி ஆதாயம் பெறலாம். மாணவர்களுக்கு இந்த நேரம் கடின உழைப்புக்கான நேரம். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Astro: ‘இவற்றை’ செய்தால் வாழ்க்கையில் என்றென்றும் சுக்கிர திசை தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ