புதுடெல்லி: மன்னிப்பு என்பதே மனிதர்களின் வாழ்க்கையில் நிம்மதி கொடுக்கும் உணர்ச்சியில் முக்கியமானது என்பது பலருக்கு புரிவதில்லை. ”மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன்; மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்” என்ற விருமாண்டி படத்தில் வசனம் மிகவும் பிரபலமானதற்கு காரணம் மனிதர்களின் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மன்னிப்பைப் போன்ற சிறந்த நீதிபதியும் இல்லை, குற்ற உணர்ச்சி போல உறுத்தும் வேறு துன்பமும் இல்லை. அதிலும் மன்னிக்க மனமில்லாதவரின் மனோ நிலை என்பது அவர் பட்ட மன துன்பத்தைவிட கொடிய துன்பத்தை அவருக்கே கொடுக்கும் என்பது பாவம் மன்னிக்க மனமில்லாதவர்களுக்கு தெரிவதில்லை.


மன்னிக்க மனம் இல்லை என்றால், மன நிம்மதி இல்லை, இதை ஜாதகத்தின் கட்டங்கள் சொல்லும் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், வாழ்வில் ஒவ்வொரு விஷயம் தொடர்பாகவும் ஒருவரின் ஜாதகம் குறிப்புகளைக் கொடுக்கிறது.


பணம், வீடு வாசல் கார், சொந்தம் பந்தம் என அனைத்தும் இருந்தாலும் நிம்மதி இல்லை என்று சொல்பவர்களை பார்த்திருக்கலாம். அவர்களின் ஜாதகத்தில், இது தொடர்பான காரணம் இருப்பதை அறிந்துக் கொண்டால் பரிகாரம் செய்து மன நிம்மதியை கொண்டுவரலாம்.


மேலும் படிக்க | ஆண்களுக்கான மாங்கல்ய தோஷமும் அதற்கான பரிகாரங்களும்


ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி மற்றும் கேது இருந்தால் மன்னிப்பு என்ற வார்த்தை அவர்களுக்கு கசப்பானதாக இருக்கும். அதேபோல, சனி எட்டில் பாதகமாக வக்கிர கதியில் இருந்தால் மாங்கல்ய ஸ்தானத்தில் பாதிப்பு இருப்பதால், தனது வாழ்க்கைத் துணையின் தவறுகளை மன்னிக்க முடியாமல் மன நிம்மதியில்லாமல் ஜாதகர் அவதிப்படுவார்.


லக்னாதிபதி மற்றும் அஷ்டாமதிபதியான செவ்வாயின் பார்வை ஏழாம் வீட்டின் மீது இருந்தாலும் மன்னிப்பு தொடர்பான வருத்தம் பாதிப்பை ஏற்படுத்தும். 


ஜாதகத்தின் ஏழாம் இடத்தில் இருந்து ஒன்பதாமிடம், 10 ம் இடம் மற்றும் இரண்டாம் இடங்கள் சுத்தமாக இருந்தால், திருமணம் நடந்தாலும், தாம்பத்திய வாழ்க்கியில் கசப்பே எஞ்சி நிற்கும்.


மேலும் படிக்க | அஷ்டலஷ்மி யோகத்தால் ஆனந்த வாழ்வு வாழும் ஜாதகர்கள்
 
இதற்கான பரிகாரம் ஜாதக ரீதியில் பல இருந்தாலும், மன்னிக்கும் மனமே, நிம்மதியான வாழ்க்கையின் அடிப்படை என்பதை புரிந்துக் கொள்வதே என்பது நிதர்சனமான உண்மை. 


பிறர் உங்களை மன்னிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு முதலில் மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பதிலாக இருக்கும். இருந்தாலும் ஜாதக ரீதியிலான பரிகாரங்களை தேர்ந்த ஜோதிடர்களே சரியாக சொல்ல முடியும்.


இருந்தாலும் பொதுப்படையாக மன நிம்மதிக்கான பரிகாரம் என்பது அன்னதானம் மற்றும் முருகனுக்கு விரதம் இருப்பது என்று நம்பப்படுகிறது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சூரியனும் புதனும் கடக ராசியில்: கும்பத்திற்கு அதிர்ஷ்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR