வாழ்க்கையை தீர்மானிக்கும் ராசிகளைப் பற்றி ‘இந்த’ விஷயம் தெரியுமா? ’ராசிகள்’ ஆதி முதல் அந்தம் வரை!
Horoscope & Importance Of Zodiacs : ஜாதகம், ஜோதிடம், ராசி பலன் என்று சொல்கிறோம். உண்மையில் இந்த ராசி என்றால் என்ன? தெரிந்துக் கொள்வோம்...
இந்தியாவின் பாரம்பரிய ஜோதிடக்கலை மிகவும் துல்லியமானது. ஜோதிடம் என்பது கடல் என்று சொல்லலாம். அதில் முத்தெடுக்க மூழ்கினால் ஒரு நாளும் திருப்தியே வராது. ஜோதிடத்தில் விருப்பம் ஏற்பட்டால், அதை அறிந்து தெளிய வாழ்க்கை முழுவதுமே போறாது என்று சொல்லலாம். ஜோதிடத்தின் அடிப்படையை அறிந்துக் கொள்வோம்.
ஜாதகம், ஜோதிடம் ராசி பலன் என்று சொல்கிறோம். உண்மையில் இந்த ராசி என்றால் என்ன? தெரிந்துக் கொள்வோம்... பூமியை சுற்றி உள்ள 360° கோணத்தை 12 சம பாகங்களாக பிரித்து, 12 ராசிகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஒரு ராசிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30° கோணத்தில் உள்ள விண்மின்களை கற்பனையாக இணைத்து உருவாக்கப்பட்ட உருவமே ராசி ஆகும்.
ஜோதிட கணக்கீடுகளில் ராசிகளின் முக்கியத்துவம் மிகவும் முக்கியமானது. ராசிகள் ஒவ்வொன்றிருக்கும் ஒரு உருவகம் தரப்பட்டிருக்கும். உதாரணமாக மேஷ ராசிக்கு ஆடு, சிம்ம ராசிக்கு சிங்கம்.... விண்மீன்களின் இணைப்பு தான் ராசி என்னும்போது, ராசிகளின் உருவங்களும் விண்மீண்களின் இணைப்பால் வரப்படும் உருவமாகவே உருவகப்படுத்தப்படுகிறது.
ராசிமண்டலத்தில் உள்ள 12 ராசிகள் பற்றி தெரிந்துக் கொள்வோம். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 ராசிகளுக்கும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 12 ராசிகளுக்குமான உருவங்கள் என்ன? தெரிந்துக் கொள்வோம்.
மேஷம் - ஆடு
ரிஷபம் - காளை
மிதுனம் - இரட்டையர்
கடகம் - நண்டு
சிம்மம் - சிங்கம்
கன்னி - கன்னிப் பெண்
துலாம் - தராசு
விருச்சிகம் - தேள்
தனுசு - வில்லேந்திய உருவம் (மேல் பகுதி மனிதன், உடலின் கீழ்பகுதி குதிரை)
மகரம் - குதிரைத் தலையுடன் கூடிய சுறாமீன்
கும்பம் - குடம்
மீனம் - இரட்டை மீன்
மேலும் படிக்க | கிருஷ்ண ஜெயந்தியில் செவ்வாய் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு குபேர கோடீஸ்வர யோகம்
ஒருவரின் பிறந்த ராசியும் லக்னமும் அந்த ராசியின் குணங்களை பிரதிபளிப்பதால் அவ்வாறு உள்ளது என்றும் சொல்லலாம்.
அதேபோல 12 ராசிகளும் ஆண் ராசி என்றும் பெண் ராசி என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண் ராசியின் பொதுவான குணங்கள் தைரியம், உடல் வலிமை மற்றும் கம்பீரம் இருக்கும் ராசிகள் ஆண்ராசி என்று வகைப்படுத்தப்படுகின்றன. பொறுமை, கூச்ச சுபாவம், நளினம், தாய்மை, பெண்மை போன்றவை பெண் ராசியின் பொதுவான குணங்கள். இந்த குணங்களைக் கொண்ட ராசிகள் பெண் ராசியாக வகைப்படுத்தப்படுகின்றன. உங்கள் ராசி எந்த வகையைச் சேர்ந்தது?
மேஷம் - ஆண்
ரிஷபம் - பெண்
மிதுனம் - ஆண்
கடகம் - பெண்
சிம்மம் - ஆண்
கன்னி - பெண்
துலாம் - ஆண்
விருச்சிகம் - பெண்
தனுசு - ஆண்
மகரம் - பெண்
கும்பம் - ஆண்
மீனம் - பெண்
மேலும் படிக்க | சனியின் வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு
அதேபோல, 12 ராசிகளும் நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றி த்ரிந்துக் கொள்வோம். நெருப்பு ராசியின் பொதுவான குணங்கள் கோபம், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை என்றால், பொறுமை, அன்பு, பாசம் ஆகியவை நிலத்திற்கு உரிய பண்புகள். அதேபோல அலைபாய்தல், தற்பெருமை மற்றும் புத்துணர்ச்சித் தன்மை கொண்டது காற்று ராசி. இறுதியாக சூழலுக்கு தகுந்தவாறு மாறுதல், அமைதி மற்றும் இளகிய குணத்துடன் இருப்பது நீர் ராசியின் குணம். ராசிமண்டலத்தின் 12 ராசிகளில் இந்த தன்மைகளைக் கொண்ட ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
மேஷம் - நெருப்பு
ரிஷபம் - நிலம்
மிதுனம் - காற்று
கடகம் - நீர்
சிம்மம் - நெருப்பு
கன்னி - நிலம்
துலாம் - காற்று
விருச்சிகம் - நீர்
தனுசு - நெருப்பு
மகரம் - நிலம்
கும்பம் - காற்று
மீனம் - நீர்
இவை அனைத்தும் 12 ராசிகளின் அடிப்படை அம்சங்களாகும். இதுபோன்ற விளக்கமான ஜோதிடப் பதிவுகளை தொடர்ந்து வழங்கிவருகிறோம். படித்து தெரிந்து தெளிவு பெற தொடர்ந்து ஜீ நியூஸ் தமிழ் கட்டுரைகளை படிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ