Saturn Sun Conjunction After 30 Days In Kumbh: ஜோதிடத்தின் படி, சனியின் ராசியில் ஏற்படும் மாற்றம் மற்றும் சனி மற்ற கிரகங்களுடன் இணைந்து உருவாகும் சுப யோகம் ஆகியவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் விழும். ஜூலை மாதத்தில், சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் ஆறாம் மற்றும் எட்டாம் வீடுகளில் அமர்ந்து சக்தி வாய்ந்த ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கி உள்ளது. தற்போது வரும் ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகஸ்ட் 16 அன்று சூரியனின் பெயர்ச்சிக்குப் பிறகு, ஏழாவது வீட்டில் தொடர்பு கொள்ளும்போது சூரியன் மற்றும் சனி இரண்டு கிரகங்களும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும். அதன் காரணமாக சமசப்தம யோகம் உருவாகும். ஜோதிடத்தில், சமசப்தம யோகம் மிகவும் மங்களகரமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால் சில அசுப கிரகங்களின் சேர்க்கை சிலரின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே ஆகஸ்டில் சூரியன்-சனியின் ஏற்படும் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி.. மேஷம், துலாம், மகரத்திற்கு அதிர்ஷ்டம், பண மழை


மேஷம் (Aries Zodiac Sign): சூரியன் சனியின் சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளிடம் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். கடினமாக உழைத்தாலும் அதற்கு ஏற்ப நல்ல பலன் கிடைக்காது. அலுவலகத்தில் உங்களின் உழைப்பை கெடுக்க முயற்சி செய்யலாம். நிதி விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டாம். வாகனத்தை ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நிதி இழப்பீடு ஏற்படலாம். 


மகரம் (Capricorn Zodiac Sign): சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் உருவாகப் போகும் சமசப்தம யோகம் மகர ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கலாம். முக்கியமான வேலைகளில் சில தாமதங்கள் ஏற்படலாம். நீதிமன்ற வழக்குகளில் சச்சரவுகள் அதிகரிக்கலாம். மனம் கலங்கலாம். உறவுகளில் மோதல்கள் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். தொழிலில் சவால்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும்.


மீனம் (Pisces Zodiac Sign): சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் உருவாகப் போகும் சமசப்தம யோகம் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சொத்துகளில் சர்ச்சைகள் அதிகரிக்கக்கூடும். சட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். அதிகப்படியான செலவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் தடைகள் ஏற்படும். திருமண வாழ்வில் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். உறவுகளில் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம். எதிரிகளால் பாதிப்பு அடையலாம், சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். நிதி விஷயங்களில் கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகள்.. இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், பணம், புகழ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ