சனி வக்ர பெயர்ச்சி.. மேஷம், துலாம், மகரத்திற்கு அதிர்ஷ்டம், பண மழை

Saturn Retrograde 2024: சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் நகர்கிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை சனி பகவான் வழங்குவார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 28, 2024, 06:28 PM IST
  • ஜூன் 29, 2024 அன்று கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார்.
  • நவம்பர் 15 ஆம் தேதி கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் கொட்டும்.
சனி வக்ர பெயர்ச்சி.. மேஷம், துலாம், மகரத்திற்கு அதிர்ஷ்டம், பண மழை title=

Saturn Retrograde 2024: ஜோதிடத்தில், சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். ஏனெனில் சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணிக்க சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். தற்போது சனிபகவான் தனது மூலஸ்தான ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். 

இதனிடையே கடந்த ஜூன் 29, 2024 அன்று கும்ப ராசியில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார், அதன் பின்னர் அடுத்த 5 மாதங்களுக்கு சனி இதே நிலையில் தான் இருப்பார். இதன் பிறகு வருகிற நவம்பர் 15 ஆம் தேதி கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜோதிடத்தின் படி சனி வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி அடைவது அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப பலன்களைத் தரும். இதில் குறிப்பாக மேஷம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி எப்படிப்பட்ட பலனைத் தருவார் என்பதை பார்ப்போம்.

மேஷம் (Saturn Retrograde Effect on Aries): சனி உங்கள் ராசியிலிருந்து 11வது வீட்டில் வக்கர பெயர்ச்சி அடைந்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் கொட்டும். 

எனினும் கடினமாக உழைத்தால் மட்டுமே சுப பலன்களை பெற முடியும். தொழிலில் சில தடைகளை சந்திக்க நேரிடும். சனியின் சுப பலன்களை பெற நீங்கள் விரும்பினால், ஓம் நமோ நாராயண மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிக்கவும்.

மேலும் படிக்க | குரு ஆட்டம் இன்னும் 291 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பண மழை, செல்வம், புகழ்

துலாம் (Saturn Retrograde Effect on Libra): சனி உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் வெற்றிபெற, அதிக முயற்சிகளையும் கடின உழைப்பையும் செய்ய வேண்டியிருக்கும்.

மகரம் (Saturn Retrograde Effect on Capricorn): ஏழரை சனியில் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியானது நல்ல பலன்களை கொடுக்கும். இந்த காலக்கட்டத்தில், உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நீங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்தால், பிரச்சினைகளில் இருந்து வெளியே வரலாம். திருமண முறிவு அடைந்தவர்களுக்கு, இரண்டாவது திருமணம் நடக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வெறி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு மகாராஜ பொற்காலம், பணமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News