ஒருவருக்கு யோகம், மற்றொருவருக்கு சாபம்! சுக்கிரன் & குரு ஏற்படுத்தும் சமசப்தக தோஷம் படுத்தும் பாடு!
Venus Jupiter Conjuntion Samasaptaka Yogam : சுக்கிரனும் வியாழனும் எதிரெதிர் ராசிகளில் அமரப்போவதால் அக்டோபரில் சமாசப்தக தோஷம் உருவாக உள்ளது. இது யாருக்கெல்லாம் கெடுதல் செய்யும்? தெரிந்துக் கொள்வோம்...
தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அக்டோபர் 13ம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். ஒன்றுக்கும் ஏழுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதா? ஜோதிட கணக்கீடுகளின்படி, வியாழனும் சுக்கிரனும் ஏழு வீடுகள் தள்ளி இருக்கும்போது உருவாகும் நிலை சமசப்தக யோகம்/தோஷம் எனப்படுகிறது.
சுக்கிரன் பெண்பால் கிரகம், அசுர கிரகத்தில் ஒன்று என்றால், நவகிரகங்களில் ஒரேயொரு சுப கிரகம் குரு மட்டுமே. சுக்கிரனும், வியாழனும் ஒருவரை மற்றொருவர் நேருக்கு நேர் 180 டிகிரியில் பார்த்துக் கொள்ளும் இடத்தில் வரும்போது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாறுதல்கள் ஏற்படும்.
இந்த சமசப்தக தோஷம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களைக் கொடுக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
சமசப்தக தோஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு மோசமான செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கும்.. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேறாது.. பொருளாதார நிலையில் சரிவு ஏற்படும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சமசப்தக தோஷ காலம், பழைய பிரச்சனைகளால் மன வருத்தத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | சரஸ்வதி பூஜையன்று இந்த மந்திரங்களை சொன்னால் போதும்: முட்டாளும் மேதையாகலாம்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மனதில் கவலைகளைக் கொடுக்கும் குரு மற்றும் சுக்கிரனின் நிலையால், வரவேண்டிய பணம் வந்து சேர்வதில் தடங்கல்கள் இருக்கும். தொழில் முனைவோர், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றத்தில் பாதை கிடைக்காதா என்ற எக்கம் தொடரும். மனதில் உள்ள நம்பிக்கைகளை தளரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய காலம் இது.
சிம்மம்
தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு வகையான பிரச்சனைகள் தோன்றலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அமைதியான வாழ்க்கைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதை புரிந்துக் கொண்டால், பதற்றங்களைத் தவிர்க்கலாம். எந்த வகையான முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும்
கன்னி
கன்னி ராசியினருக்கு சம்சப்தக யோகம் கடினமான காலங்களை கொண்டு வந்து சேர்க்கும். கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் வரும், தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும், பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு அதிக அழுத்தம் எடுப்பதைத் தவிர்க்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | நவராத்திரியில் சக்தி வழிபாடு! 51 சக்திபீடங்களிலும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தசரா கோலாகலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ