சிம்மத்தில் வக்ரமாகும் புதன்! 12இல் 5 ராசிகளுக்கு கெடுபலன்களைக் கொடுக்கும் புத்திகாரகர்!

Mercury Retrograde In LEO : இந்த குரோதி ஆண்டில், புதன் கிரகம் சிம்ம ராசியில் வக்ர கதியில் இயங்கும்போது ஏற்படும் கெடுபலன்களை எதிர்கொள்ளும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 30, 2024, 06:24 PM IST
  • புதன் கிரகத்தின் வக்ரப் பெயர்ச்சி
  • சிம்ம ராசியில் வக்ர கதிக்கு செல்லும் புதன்
  • ஆகஸ்ட் 5 முதல் அதகளம் செய்யும் புதன்
சிம்மத்தில் வக்ரமாகும் புதன்! 12இல் 5 ராசிகளுக்கு கெடுபலன்களைக் கொடுக்கும் புத்திகாரகர்! title=

 சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன், ஞானத்தையும் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது. ஒரு ஜாதகத்தில் புதன் பாதகமாக அமைந்தால், நரம்பு, தோல், காது மற்றும் நுரையீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது சிம்ம ராசியில் புதன் வக்ரகதியில் இயங்கும் நிலை ஏற்பட்டால், அது 12 ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும்.  

ஜூலை 19ம் தேதியன்று புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியானார். அதன்பிறகு தற்போது, சிம்மத்திலேயே புதன் வக்ர கதியில் இயங்குவார். ஞானக்காரகர் கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் சுற்றுவது, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுப்பதாக இருந்தாலும், சில ராசிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். புதன் கிரகம் சிம்ம ராசியில் வக்ர கதியில் இயங்குவதால் ஏற்படும் கெடுபலன்களை எதிர்கொள்ளும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

எதிர்காலத்தை ஓரளவாவது கணித்தால், சற்று கவனமாக செயல்படலாம் அல்லவா? எனவே சிம்மத்தில் புதன் வக்ரப் பெயர்ச்சியால் ஏற்படும் மோசமான காலத்தை அனுபவிக்கப் போவது யார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, புதன் இரண்டாவது மற்றும் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக இருப்பவர். எனவே, புதன் சிம்மத்தில் வக்ர கதியில் இயங்கும்போது, குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செலவுகளும் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!

கடகம்
சிம்மத்தில் வக்ரகதியில் இயங்கவிருக்குக்ம் புதன் கிரகம், மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆரோக்கியத்திலும் பின்னடைவு ஏற்படலாம். கல்விக்கு அதிபதியான புதன் வக்ரகதியில் இயங்கும்போது, படிப்பவர்களுக்கு சில தடைகள் ஏற்படலாம், மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் கவலைப்பட நேரிடலாம்.

கன்னி 
கன்னி ராசிக்காரர்களுக்கு, புதன் முதல் மற்றும் பத்தாம் வீட்டின் அதிபதியாக இருப்பவர். சிம்மத்தில் புதன் வக்ரகதியில் பயணிக்கும்போது, வெற்றிக்கான வாய்ப்புகல் தட்டிப் போகலாம். தொழில் செய்பவர்களுக்கு ஏமாற்றங்களும், பலவிதமான மாற்றங்களும் ஏற்படலாம். முடிவெடுக்கும்போது கவனமாக இருக்கவும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, புதன் ஆறாவது மற்றும் ஒன்பதாம் வீட்டின் அதிபதியாக இருப்பதால், சிம்மத்தில் இந்த புதன் வக்ரகதியில் இயங்கும்போது பல தடைகளையும் சோகமான தருணங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். தொழில் ரீதியாகவும், உத்யோக ரீதியாகவும் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம், சிம்மத்தில் புதன் வக்ரகதியில் இயங்குவதால் பண நஷ்டங்கள் ஏற்படலாம்.  

மீனம்
சிம்மத்தில் புதன் வக்ரகதியில் இயங்கும்போது, பணவரத்து தொடர்பாக சில தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் அதிக போட்டி ஏற்படும், லாபம் குறையும். வாழ்க்கையில் இனிமையான தருணங்களை அனுபவிக்கும் வாய்ப்புகளை காரணமே இல்லாமல் தவறவிட வேண்டியிருக்கும்.  தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நீர் ராசிக்குள் நுழையும் புதன்! மூளை வெப்பத்தை தணிக்கும் கடகம்! புத்திசாலிகளுக்கு கொண்டாட்டம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News