வாழ்வில் வளங்களை எல்லாம் அளிக்கும் சுக்கிர பகவான் மிதுன ராசியில் சுக்கிரன் பிரவேசிக்கப் போகிறார், சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சியானது அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஜூன் 12-ம் தேதி மாலை 06:37 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் நுழையும் சுக்கிர பகவான், ஜூலை 7-ம் தேதி கடக ராசிக்கு செல்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சுக்கிரன் இருக்கும் லக்கினத்தின் அடிப்படையில் ஒருவரின் ஜாதக பலன் அமைகிறது. ஒரு கிரகம் இருக்கும் லக்கினம், ராசி ஆகியவை ஜோதிட பலன்கள் சொல்வதற்கு முக்கியமான அம்சங்களாக திகழ்கின்றன. சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்.


ஜென்ம லக்னத்தில் சுக்கிரன்


ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு என பார்ப்பவரை கவரும் பேரழகாக இருப்பார். 


இரண்டாம் லக்னத்தில் சுக்கிரன்
சுக்கிரன் லக்னத்திற்கு 2ல் இருந்தால் சுக வாழ்வு நிச்சயம். எதிரில் இருப்பவர்களை கவர்ச்சியான பேச்சால் கவரும் ஈர்ப்பு இருக்கும். ஆனால் பாவக் கிரகங்கள் சேர்க்கை பெற்றும், சுக்கிரன் பலம் இழந்தும் இருந்தால் தவறான தொடர்புகளும் தீய பழக்க வழக்கங்களும் ஏற்படும் வாய்ப்பு உண்டு.


மேலும் படிக்க | இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொடிகட்டி பறப்பார்கள்


மூன்றில் சுக்கிரன்
சுக்கிரன் மூன்றாவது லக்னத்தில் இருந்தால் வசதி வாய்ப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்பவராகவும், பிரபலமானவராகவும் இருப்பார்கள். 


நான்கில் சுக்கிரன் 


சொகுசு வாழ்வு மற்றும் பண வரவுக்கு காரணமாக இருப்பவர் சுக்கிர பகவான். ஆனால், அதற்கு அவர் ஜாதகத்தில் நான்காவது லக்னத்தில் இருக்க வேண்டும்.


ஐந்தில் சுக்கிரன்
சுக்கிரன் 5ம் லக்னத்தில் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான வாழ்வு என நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.


ஆறில் சுக்கிரன்
திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக்கிரன் ஆறில் இருந்தால் ஏற்படும். அதிலும் சுக்கிரன் பலம் இழந்து பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். 


மேலும் படிக்க | ஓம் எனும் பிரணவ மந்திரம்! பிரபஞ்சத்தின் மூலாதார மந்திரத்தின் ஆன்மீகச் சிறப்பு!


ஏழில் சுக்கிரன்


சுக்கிரன் ஏழாவது லக்னத்தில் இருந்து கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும்.


எட்டில் சுக்கிரன்
எட்டாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் சுக வாழ்வு இருந்தாலும் அது பாதிக்கப்படும். திருமணம் தாமதமாகும். வீடு உட்பட சொத்துகள் இருந்தாலும் அதில் பிரச்சனை இருக்கும். 


ஒன்பதில் சுக்கிரன்
சுக்கிரன் ஒன்பதாம் லக்னத்தில் சுப கிரக பார்வை பெற்றிருந்தாலும், சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும்.


பத்தில் சுக்கிரன்
சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருந்தால் கலைத்துறையில் புகழ் அடைவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.


பதினொன்றில் சுக்கிரன்
சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத பண வரவு உண்டாகும். அதில், சுக்கிரனுடன் பாவகிரகங்கள் சேர்ந்தால், தவறான வழியில் பணம் வந்து சேரும்.


பணிரெண்டில் சுக்கிரன்


12ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், சுக வாழ்வு, துணையுடன் தாம்பத்திய உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி அந்நியோன்யமாக இருப்பதற்கு 12வது லக்னத்தில் சுக்கிரன் இருக்க வேண்டும்.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ