Lord Shaneeswaran Worship : நவகிரகங்களில் நீதிமான் என்று அறியப்படும் சனீஸ்வரர், நமது கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைக் கொடுப்பவர். நமது செயல்களால் ஏற்படும் வினைகளுக்கு ஏற்ப நமக்கு பலன்களை கொடுத்து கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரர், சூரியன் மற்றும் சாயா தேவியின் மகன். சனீஸ்வரரின் வாகனமான காகத்திற்கு உணவிடுவது சிறப்பு. ஒழுக்கம், கண்ணியம், முயற்சி, என அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் சனி பகவான் தான்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சனி பகவான், ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமரவில்லை என்றால், வாழ்க்கை மிகவும் கொடுமையானதாக மாறிவிடும். மோசமாக இருக்கும் வாழ்க்கையை சீராக்கவும், ஜாதகத்தில் சனியை பலப்படுத்தவும் சில வாழ்க்கைமுறை பழக்கங்களை கையாண்டால் போகும்.
மீன்களுக்கு உணவு கொடுப்பது சனி கிரகத்தின் தாக்கத்தை குறைக்கும். சனி கிரகத்திற்காக சிறப்பு ஹோமம் செய்யலாம். ஆனால், அது வீட்டில் செய்யக்கூடாது. தேவைப்படுபவர்களுக்கு கம்பளி மற்றும் போர்வை தானம் கொடுங்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது சனி பகவானின் மனதை இலக்கும்.
சனி கிரகத்திற்கான பரிகாரம் மற்றும் அதற்கான பலன்கள்
சனியின் கோபத்தை குறைப்பதற்கு செய்யும் பரிகாரங்கள், வாழ்வில் வளத்தை ஏற்படுத்தும். ஆன்மீகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். தொழில் மற்றும் பதவியில் உயர்வடைய சனி பகவானுக்கு செய்யும் பூஜைகள் உதவும்.
சனி பகவானுக்கு செய்யும் பூஜைகளும் பரிகாரங்களும், ஞானம், பொருளாதாரத்தில் செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் கண் திருஷ்டியை அகற்றும்.
சனி பகவானுக்கான பரிகாரம்
தானம்: எதையும் எதிர்பாராமல் தானம் செய்வது கர்மாவின் அதிபதியான சனீஸ்வரரை மகிழ்ச்சியடையச் செய்யும். தேவைப்படுபவர்களுக்கு தானாக முன்வந்து அன்புடன் தானம் அளிப்பதன் மூலம் உங்கள் கர்ம கடள் தீரும்.
சேவை: சனி பகவான், வேலை செய்பவர்களுக்கான கிரகம் ஆவார். கடின உழைப்பு மற்றும் அலைச்சல் கொடுக்கும் சனி பகவான், சேவை செய்பவர்களையும் உடல் உழைப்பு செய்பவர்களையும் ரட்சிக்கிறார். யாட்களையும் கடின உழைப்பாளிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
காலபைரவர் வழிபாடு: - சிவபெருமானின் ஒரு வடிவமான கால பைரவரை வழிபடுவது சனீஸ்வரரின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தும்.
மேலும் படிக்க | ஜூன் மாதம் முதல் வார ராசிபலன் அறிவோம்...
அரச மரம் வழிபாடு: மரங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அரச மரத்தை வழிபடுவது சனீஸ்வரரின் தாக்கத்தை மட்டுப்படுத்தும்.
அனுமான் வழிபாடு: சனீஸ்வரரின் தீய பலன்களைக் குறைக்க சனீஸ்வர வழிபாடு உதவும். சனீஸ்வரரின் நேர்மறை சக்தியை பெறுவதற்கு அனுமார் வழிபாடு உத்வும்.
ஒழுக்கமான வாழ்க்கைமுறை: வாழ்க்கையில் சில ஒழுக்கங்களையும் நியதிகளையும் கடைபிடிப்பவர்கள் மீது சனீஸ்வரர் கருணை புரிவார்.
வீட்டை சுத்தமாக வைக்கவும்: சுத்தமாக இருப்பது சனீஸ்வரருக்கு பிடித்தமானது. அதேபோல், வீட்டில் தேவையில்லாத குப்பைகளை அகற்றுங்கள். சுத்தமாக இருப்பதே பல சிரமங்களைப் போக்கும்.
சிவ வழிபாடு: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரர், ஈஸ்வர வழிபாட்டிற்கு மயங்குபவர். நவகிரகங்களின் நாயகரான சிவனை துதிப்பதும் வழிபடுவதும் சனி தோஷங்களைப் போக்கும்.
தசரத சனி ஸ்தோத்திரம்: சனி 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோகிணி நட்சத்திரத்தில் நுழையும்போது, அனைவருக்கும் கஷ்டத்தைக் கொடுப்பார். ராமரின் தந்தை தசரதர் சனீஸ்வரரை வணங்கி, பிரச்சனையில்லாமல் வாழ்ந்தார். அவர் சொன்ன மந்திரங்களும் வழிபாடும், தசரத சனி ஸ்தோத்திரம் என்று பிரபலமானது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை தசரத சனி ஸ்தோத்திரம் சொல்லி வணங்குவது சனி தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
சனிக்கிழமை விளக்கிடுதல்: சனிக்கிழமையன்று, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் விளக்கிட்டு, எள் தானம் செய்வது சிறந்த சனி பரிகாரமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அங்காரகரின் அன்பான பார்வையினால் அதிர்ஷ்டத்தால் தூள் கிளப்பப்போகும் ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ