இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொடிகட்டி பறப்பார்கள்

Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் இன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மேஷத்தின் அதிபதியான செவ்வாய் அதே ராசியில் பெயர்ச்சி ஆவதால் இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகின்றது. செவ்வாய் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் அடைய உள்ள ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sevvai Peyarchi Palangal: தைரியம், வீடு, நிலம், மனை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் உள்ளார். அவர் கிரகங்களின் சேனாதிபதி என போற்றப்படுகிறார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சிலர் ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். மகிழ்ச்சி மழையாய் பொழியும்.

1 /9

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகள் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றன.

2 /9

கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் இன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

3 /9

இன்றைய செவ்வாய் பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் அடையுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /9

மேஷம்: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகின்றது. இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்  

5 /9

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பண வரவை அதிகரிக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகமாகும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்கள் வங்கிகளில் கடன்களுக்காக விண்ணப்பித்திருந்தால் அந்தக் கடன்கள் இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும். உங்கள் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்

6 /9

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மூலம் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண வரவும் அதிகமாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பணத்தை சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும்.

7 /9

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய். செவ்வாய் பெயர்ச்சி விருச்சிக ராசி காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். உங்கள் எதிரிகளால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

8 /9

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும். இப்பொழுது முதலீடு செய்வது நல்லது. இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நல்ல செய்திகள் கிடைக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.