செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்: 4 ராசிகளுக்கு அதிக பண வரவு, லாபம்

Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் ருச்சக் ராஜயோகம் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் இந்தக் காலத்தில் 4 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 23, 2024, 12:14 PM IST
  • செவ்வாய்ப் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தைத் தரும்.
  • உங்கள் கடின உழைப்பு பலனைத் தரும்.
  • அதன் நேர்மறையான விளைவுகளால் வாழ்வில் பல ஆதாயங்களை பெறுவீர்கள்.
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்: 4 ராசிகளுக்கு அதிக பண வரவு, லாபம் title=

Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இவற்றிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. 

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய், தைரியம், வீரம், நிலம், வீடு, திருமணம், சாதனை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். செவ்வாய் கிரகங்களின் சேனாதிபதியாக பார்க்கப்படுகிறார். ஜூன் மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை மிகவும் சுவாரஸ்யமான வகையில் இருக்கும். 

மே 31 அன்று, செவ்வாய் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இது ஒரு சுவாரஸ்யமான ராஜயோகத்தை உருவாக்கும். மே இறுதியில் செவ்வாயில் நிகழும் மாற்றத்தால், ஜூன் மாதத்தின் தொடக்கம் சக்திவாய்ந்த ருச்சக ராஜயோகத்தில் நடக்கும். செவ்வாய்ப் பெயர்ச்சியால் உருவாகும் சுவாரசியமான ராஜயோகம் ஜூலை 12 வரை நீடிக்கும். 

செவ்வாய் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் ருச்சக் ராஜயோகம் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் இந்தக் காலத்தில் 4 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இவர்கள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். துணிவும் உறுதியும் அதிகரிக்கும். இதனால் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். ருச்சக ராஜயோகத்தால் அதிகபட்ச லாபத்தை பெறவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries): 

செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசியில்தான் நடக்கவுள்ளது. செவ்வாய் மேஷ ராசியின் அதிபதியாகவும் உளார். ஆகையால் மேஷ ராசிக்காரர்களுக்கு ருச்சக ராஜயோகம் அதிக நற்பலன்களைத் தரும். நீங்கள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அடைவீர்கள். செல்வத்துடன் மரியாதையும் அதிகரிக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம் (Taurus): 

செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வெற்றியைத் தரும். இந்த காலத்தில் பல பயணங்களை மெற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும். இதன் காரணமாக இந்த காலத்தில் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். பணி இடத்தில் உங்கள் மேல் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருந்து உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.

மேலும் படிக்க | இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குரு

மிதுனம் (Gemini): 

செவ்வாய் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் இறுதியில் நல்ல பலன்களே கிடைக்கும். உயர்கல்விக்கான கனவு நனவாகும். நீங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெறலாம். முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மீனம் (Pisces): 

செவ்வாய்ப் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தைத் தரும். உங்கள் கடின உழைப்பு பலனைத் தரும். அதன் நேர்மறையான விளைவுகளால் வாழ்வில் பல ஆதாயங்களை பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடி முடிவுக்கு வரும். மன அமைதி பெறுவீர்கள். உறவுகள் மேம்படும். வீட்டில் அனைவருடனும் நல்ல ஒருங்கிணைப்புடன் இருப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவது நன்மை தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வானில் இருந்தாலும் பஞ்சபூதங்களின் குணங்கள் கொண்ட கிரகங்கள்! ஜோதிடம் அறிவோம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News