Mars Transit: ஜோதிட சாஸ்திரத்தில் கிரங்களின் பெயற்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நமது ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களும் நிலையாக இருப்பதில்லை. அவை அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றுகின்றன, நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. இதை தவிர கிரகங்களின் இயக்கங்களும் மாறுகின்றன. கிரக அஸ்தமனம், உதயம், வக்கிரப் பெயற்சிகள், வக்ர நிவர்த்திகள் என மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கங்கள் அனைத்து ராசிகளிலும் (Zodiac Signs) காணப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் பெயர்ச்சி


ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியை மாற்றுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் தற்போது தனுசு ராசியில் உள்ளார். அவர் பிப்ரவரி 5ஆம் தேதி அதாவது நாளை இரவு 9 மணிக்கு மேல் தனது ராசியை மாற்ற உள்ளார். செவ்வாய் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். 


பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் செவ்வாய் கிரகத்தின் அருளால் மிக அதிகமான நற்பலன்கள் உண்டாகும். இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் கிரக பெயர்ச்சியின் தாக்கத்தால் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். இவர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


செவ்வாய் பெயர்ச்சியால் நற்பலன்களை அடைய உள்ள ராசிகள்


மேஷம் (Aries)


மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயற்சி நல்ல செய்திகளை கொண்டு வர உள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். ஏற்கனவே திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். விருந்தினர்கள் வர வாய்ப்புண்டு. விருந்தினர்களின் வரவால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | ஆதித்ய மங்கள யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு இனி வாழ்க்கையில் எல்லாம் சுகமே...!


கடகம் (Cancer) 


செவ்வாய் பெயர்ச்சி மிகவும் லாபகரமானதாக அமையும். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் பரிபூரண ஆதரவும் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து பலவித பரிசுகளை பெறுவீர்கள். அன்னை தந்தையின் முழுமையான ஆதரவு கிடைக்கும் வியாபாரம் நிமித்தமாக பல பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்களை அனுபவிப்பீர்கள். மாணவர்களுக்கு இது மிகவும் நல்ல காலமாக இருக்கும். படிப்பில் கவனம் அதிகமாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றியை பெறுவார்கள்.


துலாம் (Libra)


துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயிற்சி அற்புதமான பலன்களை கொண்டு வரும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேல் அதிகாரிகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஆன்மீக சுற்றுலா சென்று வர வாய்ப்புள்ளது. உங்கள் உடல் நலனில் முன்பை விட நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நோய்களிலிருந்து இப்போது நிவாரணம் கிடைக்கும்.


மகரம் (Capricorn)


மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பயிற்சி அற்புதமான நற்பலன்களை கொண்டு வரும். அரசியலில் உள்ள மகர ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் சென்று வர வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகமாகும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான எதிர்காலம், ராஜயோகம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ