குரு பெயர்ச்சி 2024: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான எதிர்காலம், ராஜயோகம்

Guru Peyarchi Palangal: மனித வாழ்க்கையில் கிரக பெயற்சிகளுக்கும் கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.

Guru Peyarchi Palangal: குருபகவான் ஒன்பது கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். இந்த ஆண்டு மே மாதம் குரு தனது ராசி மாற்றி பெயர்ச்சியாக  உள்ளார். குரு பெயர்ச்சியால் மிகப்பெரிய நன்மைகளை அடையப்போகும் அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான மற்றும் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் புகழ், வெற்றி, ஆரோக்கியம், கல்வி ஆகிய அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.  

2 /8

மே மாதம் குரு தனது ராசியை மாற்ற உள்ளார். இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

3 /8

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் மிக அதிகப்படியான லாபங்கள் உருவாகும். இவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /8

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய பணிகளை துவங்க நினைக்கும் மேஷ ராசிக்காரர்கள் இந்த காலத்தில் அதை செய்யலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் இப்போது உருவாகும்.

5 /8

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நினைப்பவை அனைத்தும் நடக்கும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பல பயணங்கள் மேற்கொள்வார்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். நல்ல செய்தியை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய பணிகளை துவங்க நினைப்பவர்கள் இப்போது அதை செய்யலாம்.

6 /8

குருவின் அருளால் கடக ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் இந்த காலத்தில் அதிகமாகும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள்.

7 /8

குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விடும். இந்த காலத்தில் உங்கள் உடல்நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். மனதில் அமைதி மேலோங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.