செவ்வாய் பெயர்ச்சி.... அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ‘6’ ராசிகள்!

செவ்வாய் சனி என் ராசியான மகரத்தில் மாறும் நிலையில், ஏற்கனவே அங்கு இருக்கும் சூரியன் மற்றும் புதன் கிரகங்களுடன் இணைய இருக்கிறார். எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 4, 2024, 02:00 PM IST
  • சூரியன் மற்றும் புதன் கிரகங்களுடன் இணைய இருக்கிறார் செவ்வாய்.
  • கிரக நிலைகளின் மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • சுப பலன்களை அனுபவிக்கும் அந்த ஆறு ராசியினரை அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பெயர்ச்சி.... அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ‘6’ ராசிகள்! title=

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி தனது ராசி மாற்றுகிறார். செவ்வாய் சனி என் ராசியான மகரத்தில் மாறும் நிலையில், ஏற்கனவே அங்கு இருக்கும் சூரியன் மற்றும் புதன் கிரகங்களுடன் இணைய இருக்கிறார். எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் ஒரு ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் அமைந்தால், அந்த ஜாதகர் தைரியமாகவும் வீரியமாகவும் செயல்படும் திறன் பெற்றவராக இருப்பார்கள். 

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

கிரக நிலைகளின் மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த செவ்வாய் பெயர்ச்சியினால், சில குறிப்பிட்ட ராசியினர் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் பயணம் செய்வார்கள். இதுவரை இருந்த தடங்கல்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். சுப பலன்களை அனுபவிக்கும் அந்த ஆறு ராசியினரை அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசியினர் செவ்வாய் கிரகத்தின் அருளால் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அடைவார்கள். திட்டங்களைத் திறன்பட வகுத்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வெற்றி காண்பார்கள். அலுவலகம் மட்டுமல்ல வீட்டிலும் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவார்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்திலும் பாராட்டுக்கள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாகவே இருக்கும். மன தைரியம் மற்றும் உறுதி சிறப்பாக இருப்பதன் காரணமாக கடின உழைப்பால் வெற்றியை பெறுவார்கள். தனக்கு வரும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வாழ்க்கையிலும் திருப்தியும் சந்தோஷமும் இருக்கும்.

மேலும் படிக்க | Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

கடக ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

கடக ராசியினருக்கு செவ்வாயின் அருளால் எல்லாமே சுபமாக நடக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் வலுவாக இருக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகுவதால் கடன்களை அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாய்ப்பு கிடைக்கும். இதுவரை வேலையில் நீடித்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

கன்னி ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசியினருக்கு செவ்வாய் பணத்தை அள்ளிக் கொடுப்பார். வேலையிலும் தொழிலும் நல்ல லாபத்தை காணலாம். முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம். இதனால் ஆதாயமும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். பரஸ்பரம் வாழ்க்கையில் புரிதல் அதிகரித்து உறவுகள் வலுப்படும்.

துலாம் ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசியினர் செவ்வாயின் அருளால் நற் பயன்களை பெறுவார்கள். தொழிலில் வேலையில் வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்கள் திறன்கள் பாராட்டப்படும். புதிய வாகனம் அல்லது நிலம் வாங்கலாம். உயர் அதிகாரிகள் உங்கள் திறனை பாராட்டுவார்கள். இது எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மீன ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

மீன ராசியினர் செவ்வாயின் அருளால் சவால்கள் அனைத்தையும் சமாளிப்பார்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவுடன் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தவர்களுடன் உறவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News