Sani Vakra Peyarchi Palangal: மற்ற கிரகங்களைப் போலவே, சனி பகவானும் தனது இயக்கத்தில் பல வித மாற்றங்களை மேற்கொள்கிறார். ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என மாற்றங்கள் நடக்கின்றன. சனியின் ஒவ்வொரு மாற்றமும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் 2023 ஆம் ஆண்டு கும்பத்தில் பெயர்ச்சி ஆனார். இந்த ஆண்டு முழுதும் அவர் கும்பத்திலேயே இருப்பார். ஜூன் 29 ஆம் தேதி சனி பகவான் கும்பத்திலேயே வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி சுமார் நான்கரை மாதங்கள் அதாவது நவம்பர் 15-ம் தேதி வரை வகர் நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். 


சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். சனி அருள் பரிபூரணமாய் கிட்டும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


கன்னி (Virgo):


கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்திகளைக் கொண்டு வரும், குறிப்பாக மாணவர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த நான்கரை மாதங்களில் பாதக கிரகங்கள் வலுவிழப்பதால் வாழ்வில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க | ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?


துலாம் (Libra):


சனி வக்ர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இதுவரை தடைபட்டிருந்த பணிகள் தற்போது நடந்து முடியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும் ஆனால் யோசிக்காமல் முடிவுகளை எடுத்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஷேர் மார்க்கெட்டில் டீல் செய்பவர்கள் நன்றாக ஆலோசித்த பிறகே பங்குகளை வாங்குவது நல்லது. சரியாக சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபம் காணலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 


விருச்சிகம் (Scorpio):


கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணலாம். பண வரவு அதிகமாகும். மாத வருமானம் பெருகும். உங்களின் நிதிப் பிரச்சனைகள் பெரிய அளவில் தீரும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நல்ல லாபம் ஈட்டலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  )


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.... வெற்றிகள் குவியும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ