சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்

Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

Sukran Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. நாளை மிதுன ராசியில் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

1 /10

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என்று இன்னும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.  சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

2 /10

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு நிதி நிலை மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.   

3 /10

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் பல வித வாய்ப்புகளை பெறுவீர்கள். மாத வருமானம் கூடும். இதனால் நிதி நிலை மேம்படும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண பந்தம் மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /10

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். மாத வருமானம் அதிகரிக்கும். 

5 /10

மிதுனம்: மிதுன ராசியில்தான் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. ஆகையால், நாளை முதல் மிதுன ராசியினருக்கு சிறந்த நாட்கள் தொடங்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் கூடும். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். 

6 /10

கடகம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கடக ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் பெரிதும் பலன் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்பெறும். நீண்ட நாட்களாக துணையை தேடிக் கொண்டிருப்பவர்களின் கனவும் நனவாகும். இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். 

7 /10

சிம்மம்: கலை அல்லது இலக்கியத் துறையுடன் தொடர்புடையவர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெறலாம். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு திடீரென லாபம், பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். 

8 /10

துலாம்: சுக்கிரன் பெயர்ச்சின் தாக்கத்தால் துலா ராசிக்காரர்கள் உலக இன்பங்களை அனுபவிப்பார்கள். இலக்கியம் அல்லது கலைத்துறையில் ஆர்வம் கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

9 /10

மீனம்: ஆடை, ஆபரணங்கள், தண்ணீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதி நன்மைகளைப் பெறலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். கலைத் துறையுடன் தொடர்புடையவர்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். குழந்தகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். 

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.