சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: சனாதன தர்மத்தில், அனைத்து கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், உதய மற்றும் அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகியவை சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும்  காணப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறர். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகவும் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் இருக்கிறார். ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவர் ராசிகளில் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்துகிறார். 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இவை அவர்  கும்ப ராசியில் நுழைந்தார். சனி தற்போது வக்ர நிலையில் இருக்கிறார். நவம்பர் மாதம் அவர் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.


சனியின் சஞ்சாரத்தில் ஏற்படும் சிறு மாற்றம் கூட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். நவம்பர் 4-ம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைவார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த ராசிகளின் முன்னேற்றப்பாதை திறக்கப்படும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


நவம்பரில் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்: 


ரிஷப ராசி


ஜோதிட சாஸ்திரப்படி நவம்பர் 4-ம் தேதி கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் பல ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இத்தகைய சூழ்நிலையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில், சனி பகவானின் அருளால், வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். அதே நேரத்தில், இந்த நேரத்தில் நிதி சிக்கல்களால் சிக்கித்தவித்த ரிஷப ராசிக்காரர்களுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும். இதுமட்டுமின்றி, சனியின் வக்ர நிவர்த்தி அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையப் போகிறது.


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தியால் செல்வ மழை.. சொர்க்க வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்


மிதுன ராசி


நவம்பர் மாதத்தில் ஏற்படவுள்ள சனியின் வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இக்காலகட்டத்தில் சனி நேரடியாக இயக்கத்தில் இருப்பதால் நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் வேலையில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் லட்சுமி அன்னையின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.


சிம்ம ராசி


ஜோதிடத்தின்படி, சிம்ம ராசிக்காரர்களும் சனிபகவானின் வக்ர நிவர்த்தி சிறப்பான பலன்களை தரப் போகிறது. நிதி நிலைமையில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நவம்பரில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதுமட்டுமின்றி பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.


கன்னி ராசி


ஜோதிட சாஸ்திரப்படி, நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கப் போகிறது. இந்த நேரத்தில் சனி பகவான் வேலை மற்றும் வியாபாரத்தில் அதிக முன்னேற்றத்தைக் கொண்டு வரப் போகிறார். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பல வலுவான வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் முதலீட்டின் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பிரம்மாண்ட நிகழ்வு.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிக்கு பணமழை கொட்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ