பிரம்மாண்ட நிகழ்வு.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிக்கு பணமழை கொட்டும்

Venus Transit 2023 In Leo: அக்டோபர் 2, 2023 அன்று, சுக்கிரன் பெயர்ச்சியாகி சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சுக்கிரனின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களுக்கு பெரும் நிதிப் பலன்களைத் தரும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 27, 2023, 12:39 PM IST
  • எந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலனைத் தரும்
  • உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
  • மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
பிரம்மாண்ட நிகழ்வு.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிக்கு பணமழை கொட்டும் title=

அக்டோபரில் சுக்கிரன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, செல்வம், பிரகாசம் மற்றும் ஆடம்பரத்தை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பர்.  அந்த நபருக்கு எதிலும் குறை ஏற்படவே படாது. அதேசமயம் அசுபமான ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தால் வாழ்வில் நினைத்துக் கூட பார்க்க முடியாத கஷ்டங்களை அனுபவிப்பர் என்பார்கள். இந்நிலையில் வரவிஇருக்கும் அக்டோபர் மாத தொடக்கத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாகப் போகிறது. தற்போது சுக்கிரன் கடக ராசியில் இருப்பதால் 2023ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். மேலும் சுக்கிரன் சுமார் 23 நாட்கள் ஒரு ராசியில் இருக்கிறார். இந்த வழியில், கிட்டத்தட்ட அக்டோபர் மாதம் முழுவதும், சுக்கிரன் சிம்மத்தில் தங்கி சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக அன்பாக இருப்பார். இந்த 3 ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பணம், சுகம், வசதிகள் அதிகம் கொடுப்பதுடன், தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் தருவார். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் நிதி மற்றும் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பானது என்பதை தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் ராசி மாற்றம் நேரம்:
இந்நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை 1:02 மணிக்கு சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அதன் பிறகு அக்டோபர் 17ஆம் தேதி பூரம் நட்சத்திரத்திலும், அக்டோபர் 30ஆம் தேதி உத்திரம் நட்சத்திரத்திலும் நகர்வார். அதன்பின் நவம்பர் 3 ஆம் தேதி வரை சிம்மத்தில் இருந்த சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடைவார்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தியால் செல்வ மழை.. சொர்க்க வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலனைத் தரும்:

மேஷ ராசி (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நன்மை தரும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள், அதை ஆடம்பரமாக வாழ்க்கைக்கும் செலவிடுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் பொறுப்புகள் கூடும். நீண்ட பயணம் மேற்கொள்ளலாம்.

ரிஷப ராசி (Taurus Zodiac Sign): ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி பல நன்மைகளை தரும். ஒவ்வொரு விஷயத்திலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சொத்துக்களால் லாபம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் நிதி நிலை வலுவடையும் மற்றும் பழைய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

சிம்ம ராசி (Leo Zodiac Sign: சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சியாகப் போவதால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய முதலீடுகளால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். திடீரென்று பணம் வரலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை) 

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News