இன்னும் 20 நாட்கள் தான்... வக்ர நிவர்த்தி அடையும் புதனால் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!
சிம்மத்தில் வக்ர நிலை அடைந்துள்ள புதன், செப்டம்பர் 16 ஆம் தேதி சிம்மத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். அத்தகைய சூழ்நிலையில், சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலை மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஆகஸ்ட் 24 அன்று, கிரகங்களின் இளவரசன் என அழைப்படும் அறிவுத்திறன், புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்தின் காரணியான புதன், சிம்மத்தில் வக்ர நிலை அடைந்தார். மேலும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இந்த நிலையில் இருக்கப் போகிறார். அதன் பின் செப்டம்பர் 16ம் தேதி புதன் தன் நிலை மாறி சிம்ம ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக அழைக்கப்படுகிறார். இதனுடன், புதன் புத்திசாலித்தனம், பேச்சு, கணிதம், பொருளாதாரம், வணிகம் மற்றும் பகுத்தறியும் சக்தி ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். எனவே, புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கம் ஏற்படுகின்றன.
புதன் வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், இதன் நேரடியாக இருப்பதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெளிவாகத் தெரியும். எனினும் சில ராசி மக்களின், வேலை தொழில் மற்றும் பொருளாதார நிலையில் இதன் தெளிவான தாக்கம் காணப்படும். செப்டம்பர் 16-ம் தேதி மதியம் 1.21 மணிக்கு புதன் வக்ர நிவர்த்தி அடைகிறாஎ. வக்ர நிலையில் என்றால் எந்த ஒரு கிரகமும் தனது இயல்புக்கு மாறான இயக்க நிலையை மாற்றிக் கொண்டு நேர்கோட்டில் நகர்வதைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் செப்டம்பர் 16க்கு பிறகு சிலருக்கு பொன்னான நாட்கள் தொடங்கப் போகிறது. இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மிதுன ராசி
ஜோதிடத்தின் படி, புதனின் வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் தொடங்கும். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண ஆதாயமும் கூடும். அதே சமயம் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். எனினும் பணியிடத்தில் விவாதங்களில் இருந்து விலகி இருங்கள். இந்த நேரத்தில், நீங்கள் ஈட்டிய பணத்தை சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடக ராசி
புதனின் வக்ர நிவர்த்தி இந்த ராசிக்காரர்களின் தொழிலில் பல வாய்ப்புகளைத் தரப்போகிறது. தடை பட்ட வேலைகள் நிறாஇவேறும். இக்காலக்கட்டத்தில் தேங்கி நின்ற பணம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். அதே சமயம் உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். இதனுடன், குடும்பத்தில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும்.
மேலும் படிக்க | நாளை உருவாகும் அபூர்வ யோகம்: இந்த ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி சாதகமான பலன்களைத் தரும். வேலை தொழில் முதல் வியாபாரம் வரை இந்த நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். மறுபுறம், வேலை செய்பவர்கள் இந்த நேரத்தில் பதவி உயர்வு பெறலாம். நபரின் பொருளாதார நிலை மேம்படும், பயண வாய்ப்புகள் உருவாகும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி சாதகமாக அமையும். பண வரவு மகிழ்ச்சியைத் தரும். இந்த காலகட்டத்தில் கிரகங்களின் இளவரசன் உங்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவார். ஒரு நபர் குறைந்த முயற்சியில் நல்ல முடிவுகளைப் பெறுவார். நபரின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும்.
மீன ராசி
ஜோதிட சாஸ்திரப்படி, மீன ராசியில் புதன் இருப்பது அலுவலக வேலை செய்பவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு முதலியவற்றைப் பெறலாம். மறுபுறம், நீங்கள் ஒரு வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பணத்திற்கு பஞ்சமே இருக்காது... இந்த ‘6’ அதிசய செடிகள் இருந்தால் போதும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ