புதன் கிரக உதயம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, நாளை, அதாவது, ஜூலை 14 வெள்ளிக்கிழமை, புதன் கிரகம் கடகத்தில் உதயமாகப் போகிறது. இந்த உதயத்தால் பல ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஜாதகத்தின் மூன்று மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான புதன் திறமை, வெற்றி, தர்க்கம், புத்திசாலித்தனம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் புதனின் ஸ்தானம் வலுவாக இருக்கும் போது, ​​அந்த நபர் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம், ஜாதகத்தில் புதனின் நிலை பலவீனமாக இருக்கும்போது, ​​நபர் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றம், இயக்க மாற்றம், உதய மற்றும் அஸ்தமன நிலை மாற்றங்கள் ஆகியவை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புதனின் பெயர்ச்சி, உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய நிலைகளும் அனைத்து 12 ராசிகளின் சொந்த வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது நாளை நடக்கவுள்ள புதனின் உதயத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஏனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பர்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷ ராசி


ஜோதிட சாஸ்திரப்படி ஜூலை 14 ஆம் தேதி கடக ராசியில் புதன் உதயமாகப் போகிறது. இந்த மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களின் வேலைகளில் முன்னேற்றம் காணப்படும். மேலும் தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். புதனின் சுப பலன் காரணமாக பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.


மேலும் படிக்க | வக்ர நிலையில் சனி: 3 ராசிகளுக்கு நவம்பர் 3 வரை பணக்கார யோகம்... லாபம், ஏற்றம் கைகூடும்


ரிஷப ராசி


புதன் உச்சம் பெறுவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சமயம் மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலில் வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். நம்பிக்கை இந்த காலத்தில் மிக அதிகமாக இருக்கும். வியாபாரத்தை முன்னேற்ற புதிய வழிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


கன்னி ராசி


கன்னி ராசிக்காரர்கள் புதனின் உதயத்தால் நன்மை அடைவார்கள். இந்த காலகட்டத்தில் குடும்பத்தாரின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு, வியாபாரத்தில் புதிய உத்தி வகுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வணிக வர்க்கம் உலக அளவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் வெற்றிபெறும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிரன் வக்ர நிலை... இந்த 3 ராசிகளுக்கு பணத்திற்கும் காதலுக்கும் குறைவே இருக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ