சிம்மத்தில் வக்ரமடையும் சுக்கிரன்... ‘இந்த’ ராசிகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படலாம்!

சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி எனப்படுகிறார். ஜாதகத்தில் சுக்கிரன் நிலை ஒருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்கள் தீர்மானிக்கிறது. சுக்ரன் என்றாலே இன்பம். வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்க வழங்கக் கூடியவர். 

சுக்கிரன்  ஜூலை 7 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் நுழைந்துள்ள நிலையில், ஜூலை கடைசி வாரத்தில் தனது நிலை மாற்றி வக்ர நிலையை அடைகிறார். சுக்கிரன் எந்தெந்த ராசிகளில் அசுப பலன்களை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

சுக போகங்களின் அதிபதியான சுக்கிரன் ஜூலை 7 ஆம் தேதி அதிகாலை 4:28 மணிக்கு கடக ராசியிலிருந்து விலகி சிம்ம ராசியில் பிரவேசித்தார். இதற்குப் பிறகு ஜூலை 23 ஆம் தேதி சுக்கிரன் சிம்மத்தில் வக்ர நிலையை அடைகிறார். . இந்த கிரகத்தின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கப் போகிறது என்றாலு, சில ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2 /6

சுக்கிரன் கிரகம் வாழ்க்கையில் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். ஜாதகத்தில் சுக்கிரன் நிலை  நன்றாக இல்லை என்றால், அவரது வாழ்க்கையில் இன்பம், ஆடம்பரம் இவை  அரிதாகவே இருக்கும். வக்ரமடையும் சுக்கிரனால் எதிர்மறையான பலன்களை பெறும் மூன்று ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

3 /6

கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரன் வக்ர பெயர்ச்சியின் மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், உங்கள் உடல் நலம் அலட்சியம் செய்தால் விளவுகள் கடுமையானதாக இருக்கும். உங்கள் ஆடம்பரத்திற்காக நீங்கள் நிறைய செலவு செய்யவது உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மனதை பாதிக்கும் வகையில் எதையும் செய்யாதீர்கள்.

4 /6

மகர ராசிக்காரர்கள் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியின் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உடல் நலன் குறித்து கவனம் செலுத்துங்கள். இல்லை என்றால், பெரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பேசும் போது கவனம் தேவை. உங்கள் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்படலாம். நிதி பற்றாக்குறையினால் பண நெருக்கடியை சந்திக்க நேரிடலாம்.

5 /6

மீன ராசிக்காரர்கள் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கூடும். உடன் பிறந்தவர்களுடனான உறவில் பதற்றம் அதிகரிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் பிரச்சினைகள் அதிகம் இருக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.