சூரிய பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தில், சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். 2023 புத்தாண்டில், ஜனவரி 14 ஆம் தேதி, அவர் தனது மகனான சனியின் மகர ராசியில் பிரவேசிப்பார். ஒவ்வொரு வருடமும் மார்கழி முடிந்து தை பிறக்கும் நேரத்தில் நிகழும் சூரியனின் இந்த ராசி மாற்றம் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியனின் இந்த பெயர்ச்சின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். இது சில ராசிகளுக்கு சுபமாகவும், சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்கும். ஜனவரி மாதம் நிகழவுள்ள சூரிய பெயர்ச்சி சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்களை அளிக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மகரம்


ஜனவரி 14ஆம் தேதி சூரியன் மகர ராசியில் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக சனி, சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை ஏற்படுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மகர ராசிக்காரர்கள் ஒரு புதிய வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பண ஆதாயத்தால் பொருளாதார நிலை மேம்படும்.


தனுசு


தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் சூரியன் பிரவேசிப்பார். இந்த அமைப்பால், வியாபாரம் செய்பவர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது திரும்பக்கிடைக்கும். 


மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்! இனி ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்! 


கன்னி


மகர ராசியில் சூரியன் மாறுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சூரியன் இந்த ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் மூலம் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள்.


துலாம்


சூரியனின் இந்த சஞ்சாரம் துலா ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வரும். துலா ராசியின் நான்காம் வீட்டில் சூரியன் பெயர்ச்சியாவதால், வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்களை கையெழுத்திடுவார்கள். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த காலத்தில் துலா ராசிக்காரர்களின் ​​மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.


(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ