புதன் பெயர்ச்சியும் திரிகோண ராஜயோகமும்: செல்வ மழையில் நனையும் ‘சில’ ராசிகள்!

Mercury Transit 2023 Effects: பிப்ரவரி மாத தொடக்கத்தில் புதன் கிரகம் மகர ராசிக்குள் நுழையப் போகிறது. இந்தப் பெயர்ச்சி காரணமாக,  திரிகோண ராஜயோகம் உருவாகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 3, 2023, 02:42 PM IST
  • புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். ஆடம்பரப் பொருள் வாங்குவதில் வெற்றி பெறுவீர்கள்.
  • திருமண முயற்சிகள் கை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
புதன் பெயர்ச்சியும் திரிகோண ராஜயோகமும்: செல்வ மழையில் நனையும் ‘சில’ ராசிகள்! title=

திரிகோண ராஜயோகம் 2023: ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இடம் மாறுகிறது. இந்த நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் புதன் கிரகம் மகர ராசிக்குள் நுழையப் போகிறது. இந்தப் பெயர்ச்சி காரணமாக,  திரிகோண ராஜயோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். ஆனால் அதன் தாக்கம் குறிப்பாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெளிவாகக் காணலாம்.

மகரம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, பிப்ரவரி தொடக்கத்தில், புதன் கிரகம் மகர ராசியில் சஞ்சரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திரிகோண ராஜ யோகம் சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தின் லக்னத்தில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். இந்த காலகட்டத்தில் திருமண முயற்சிகள் கை கூடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் கூட்டாண்மை வேலையும் நன்மை பயக்கும்.

துலாம்

புதன் சஞ்சாரத்தில் இருந்து உருவாகும் திரிகோண ராஜயோகம் இந்த ராசிக்கும் சாதகமாக அமையப் போகிறது. இந்தப் பெயர்ச்சி இந்த ராசிக்கு நான்காம் வீட்டில் நடக்கப் போகிறது. இந்த வீடு உடல் மகிழ்ச்சி, சொத்து மற்றும் தாய்க்கான வீடாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த யோகத்தால் அனைத்து வகையான உடல் இன்பங்களையும் அடையலாம். ஆடம்பரப் பொருள் வாங்குவதில் வெற்றி பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

மேஷம்

தொழில் மற்றும் வணிக ரீதியாகவும் இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். இதன் போது பணியிடத்தில் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். வேலை செய்யும் பாணி மேம்படும். அதே சமயம் தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் பெறுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Traits: காதல் வலையில் சிக்க விரும்பாத ‘சில’ ராசிக்காரர்கள்!

மேலும் படிக்க | 2023 மகர சங்கராந்தியில் சூரியப் பெயர்ச்சி! புகழ் மழையில் குளிக்கும் ராசிக்காரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News