ஜனவரி 2023 கிரக மாற்றங்கள்: புத்தாண்டின் முதல் மாதத்தில், சனி உள்ளிட்ட பல கிரகங்கள் ராசிகளை மாற்றுகின்றன, இந்த மாற்றங்களால், நமது வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஜனவரி மாதத்தில், சூரியன் மற்றும் சனி உட்பட ஐந்து கிரகங்கள் ராசிகளை மாற்றுகின்றன. புத்தாண்டு சிலருக்கு சிரமங்களை அதிகரிக்கலாம். ஜனவரி மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் சஞ்சாரம் நடைபெறுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜனவரி மாதத்தில் 6 முறை கிரக பெயர்ச்சி
2023 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில், ஜனவரி மாதத்தில் 6 முறை கிரக பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் ஒரு பெயர்ச்சி சிலருக்கு கஷ்டத்தைக் கொடுத்தால், மற்றொரு கிரகத்தின் சஞ்சாரமானது, கஷ்டங்களைக் குறைத்துக் கொடுக்கும். அதேபோல, அதிக நன்மைகள் கிடைக்கும் ஒரு பெயர்ச்சியால் சந்தோஷப்படலாம் என்று எதிர்பார்க்கும் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மற்றொரு ராசி குறைத்துவிடலாம்.
கிரகங்களின் ராசி மாற்றங்கள் இந்த ராசிக்காரர்களை பாதிக்கும்
சூரியன், சனி, சுக்கிரன் போன்றவர்களின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தப் போகிறது. மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் முதல் மாதம் சற்று கடினமாகவே இருக்கும். உத்தியோகம், தொழில், பணியிடத்தில் தடைகள் ஏற்படும். இதனுடன் உடல் மற்றும் மன உளைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் கவலைகள் ஏற்படலாம். பணத்தை முதலீடு செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுங்கள்.
ஜனவரி மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி ஜனவரி 13! இந்த ராசிகளுக்கு பரிகாரங்கள் அவசியம்
புதன் வக்ர கதி 2022:
புதன் பகவான், கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 26 அன்று தனுசு ராசியில் நுழைந்தார், அதன் தாக்கம் புத்தாண்டில் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களைத் தொடர்ந்து கொடுக்கலாம்.
ஜனவரி 2023 இல் முதன் முறையாக பெயர்கிறார் சூரியன்
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஜனவரி 14, 2023 அன்று இரவு 8.57 மணிக்கு சூரியன் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் நுழைகிறார். பிப்ரவரி 13 காலை 9.57 மணி வரை மகரத்தில் இருந்து அருள்புரிவார் சூரியன்.
சூரியன், இந்த சமயத்தில் தான் தனது பாதையை மாற்றிக் கொண்டு பயணிக்கிறார். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் சூரியனின் இந்த பயணக்காலம் உத்தராயண காலம் என்று குறிப்பிடப்படுகிறது. தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய ஆறு மாதங்களும் சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிப்பார்.
சனிப் பெயர்ச்சி 2023
ஜோதிட கணக்கீடுகளின்படி, சனி ஜனவரி 17, 2023 அன்று இரவு 8:02 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைகிறார். மார்ச் 29, 2025 வரை இந்த ராசியில் இருப்பார். ஜோதிட கணக்கீடுகளின்படி, சனி தேவன் 26 மாதங்கள் முழுவதும் கும்ப ராசியில் அமர்ந்திருப்பார்.
சுக்கிரன் பெயர்ச்சி 2023
ஜோதிடக் கணக்குப்படி ஜனவரி 22ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 8.12 மணி வரை இங்கு இருக்கும் சூரியன், பிறகு மீன ராசிக்கு செல்வார்.
செவ்வாய் வக்ர பெயர்ச்சி 2023
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஜனவரி 13, 2023 அன்று, செவ்வாய் ரிஷப ராசிக்கு சென்று விடுவார்.
புதன் பெயர்ச்சி 2023
ஜோதிட கணக்கீடுகளின்படி, தற்போது புதன் தனுசு ராசியில் வக்ர கதியில் சென்றுக் கொண்டிருக்கிறார். ஜனவரி 18 அன்று, தற்காலிகமாக தனது பாதையை மாற்றும் புதன், பிப்ரவரி 7-ம் தேதி புதன் மகர ராசிக்குள் நுழைகிறார்.
மேலும் படிக்க | 2023 மகர சங்கராந்தியில் சூரியப் பெயர்ச்சி! புகழ் மழையில் குளிக்கும் ராசிக்காரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ