சூரியனின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், ஜாக்கிரதை
Sun Transit: சூரியன் பெயர்ச்சியாகியுள்ளதால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி 2022: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. சமீபத்தில் ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார். இதன் சுப, அசுப பலன்களை அனைத்து ராசிகளிலும் காணலாம்.
சூரியன் பெயர்ச்சியாகியுள்ளதால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். ஆகையால் மிதுன ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் ஒரு மாதம் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் ஒரு மாதம் கவனமாக இருக்க வேண்டும்
மேஷம்:
ஜோதிட சாஸ்திரப்படி, சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு தெளிவாகத் தெரியும். இந்த நேரத்தில், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
உங்கள் கோபம் குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம். இதுமட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் மேஷ ராசிக்கார்ரகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்:
சூரியனின் சஞ்சாரத்தின் தாக்கம் ரிஷப ராசிக்காரர்களிடமும் காணப்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் பெற்றோரிடம் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வீட்டில் டென்ஷனும் இறுக்கமான சூழலும் ஏற்படலாம். ஆகையால் குடும்ப உறுப்பினர்களிடையே பொறுமையுடன் இருங்கள்.
குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதரவையும் பெறும் வகையில், அனைவருக்கும் பிடித்த பணிகளை செய்யுங்கள். இதன் மூலம் குடும்ப உறவுகள் பலப்படும். கணவன் / மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இவர்களின் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவு ஏற்படலாம். ஆகையால், இந்த நேரத்தில் விவாதத்திலிருந்து விலகி இருங்கள்.
இந்த காலகட்டத்தில் உங்கள் வார்த்தைகளால் தவறான புரிதல்கள் ஏற்படலாம். ஆகையால் கவனமாக பேசுவது நல்லது. குறைவாகவே பேசுங்கள். இது உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களும் இந்தக் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் சூரியனின் சஞ்சாரம் உங்கள் வேலையை கெடுத்துவிடும். இந்த நேரத்தில், அலுவலகத்தில் எதிரிகளிடமிருந்து விலகி இருங்கள். அவர்கள் உங்கள் வேலையைத் தடுக்கலாம். இந்த காலத்தில் உங்கள் திட்டங்களைப் பற்றி மற்றவர்களிடம் கூறுவதை தவிர்க்கவும்.
மீனம்:
ஜோதிடத்தின் படி, மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக செல்வாக்கு காணப்படும். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் எந்த ஒரு விஷயத்திலும் வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவாகும். அதே சமயம் அலுவலகம் செல்வோருக்கு சக ஊழியர்களுடன் மனக்கசப்பு வரலாம். எனவே இந்த நேரத்தில் பாதுகாப்பாக இருங்கள். கவனமாக நடந்துகொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரியன்: எந்த ராசிகளுக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR