இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு யாரிடமும் பயமில்லை: அச்சமில்லா துணிச்சல் ராணிகள்

Astrology for Women: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட 3 ராசிகளில் பிறந்த பெண்கள் மிகவும் துணிச்சலானவர்களாக, அனைத்து பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்பவர்களாக கருதப்படுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2022, 05:34 PM IST
  • மேஷ ராசி பெண்கள் மிகவும் தைரியமாகவும் துணிச்சலுடனும் இருக்கிறார்கள்.
  • சிம்ம ராசி பெண்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
  • விருச்சிக ராசி பெண்கள் சிறு வயதிலேயே இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவேற்ற முழு முனைப்புடன் போராடுகிறார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு யாரிடமும் பயமில்லை: அச்சமில்லா துணிச்சல் ராணிகள் title=

துணிச்சலான பெண்களின் ராசிகள்: ஜோதிடத்தில், அனைத்து 12 ராசிகளின் இயல்பு, நடத்தை, ஆளுமை, பண்புகள் என அனைத்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஒருவரது எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது ஆளுமை மற்றும் அவரது அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

சிலர் தங்களது வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் எந்த வித அச்சமும் இன்றி துணிவுடன் எதிர்கொள்கிறார்கள். சிலரோ சவால்களில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். பெண்கள் பெரும்லாலும் துணிச்சலானவர்கள். உடல் ரீதியாக அவர்கள் ஆண்களை விட பலவீனமானவர்களாக கூறப்பட்டாலும், மன ரீதியாக பெண்கள் எப்போதும் அதிக துணிச்சலுடன் இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட 3 ராசிகளில் பிறந்த பெண்கள் மிகவும் துணிச்சலானவர்களாக, அனைத்து பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்பவர்களாக கருதப்படுகிறார்கள். சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் அதன் முன்னால் துவண்டு போகாமல் திடமாக நிற்பார்கள். அந்த 3 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் தைரியமானவர்கள், அச்சமற்றவர்கள்

மேஷம்: 

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால், இந்த ராசி பெண்கள் மிகவும் தைரியமாகவும் துணிச்சலுடனும் இருக்கிறார்கள். ரிஸ்க் எடுக்க அவர்கள் எப்போதும் அஞ்ச மாட்டார்கள். 

தங்களை நோக்கி வரும் எந்த சவாலைக் கண்டும் அவர்கள் பயப்படுவதில்லை. தங்களுக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால், அதை நிறைவேற்றியபின் தான் இவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். இவர்கள் சுயமரியாதை உள்ளவர்கள். கஷ்டம் வந்தாலும் அமைதியாக இருந்து பிரச்சினையை சரி செய்ய முயற்சிப்பார்கள். இவர்களுடைய நகைச்சுவை உணர்வும் அபாரமாக இருக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: 18 ஜூன் முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், செல்வம் பெருகும் 

சிம்மம்: 

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சூரியனின் செல்வாக்கின் காரணமாக, இந்த ராசி பெண்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். இவர்கள் நல்ல தலைவர்களாகவும் திகழ்வார்கள். இந்த பெண்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ள பயப்படுவதில்லை. 

சிம்ம ராசி பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அனைத்து பணிகளையும் இவர்கள் குறித்த நேரத்தில் செய்து முடிப்பவர்கள். இந்த பெண்களுக்கு மிக விரைவில் கோபம் வரும், ஆனால் அவர்கள் மிக விரைவில் சாமாதானமும் ஆகி விடுவார்கள். இந்த பெண்கள் அற்புதமான தலைமைத்துவ திறன்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்கின்றனர். அதனால்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வேகமாக வெற்றி பெறுகிறார்கள்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசி பெண்கள் மிகவும் தைரியமும் துணிச்சலும் கொண்டவர்கள். இவர்கள் சிறு வயதிலேயே இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவேற்ற முழு முனைப்புடன் போராடுகிறார்கள். ரிஸ்க் எடுப்பதில் இவர்கள் எப்போதும் பின்வாங்குவதில்லை. 

எனினும், தங்கள் வேலையில் யாருடைய தலையீடும் இவர்களுக்குப் பிடிக்காது. இவர்கள் சுதந்திரமான வாழ்க்கையை நடத்த விரும்புகிறார்கள். ஒரு திட்டத்தை அமைத்து அதன் படி செயல்படவே இவர்கள் விரும்புகிறார்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கிரகங்களினால் ஏற்படும் பிரச்சனை: கடன் தொல்லையில் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News