கிரகங்களின் அதிபதியாக சூரியன் கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசி மாறும்போதோ அல்லது வக்ர பெயர்ச்சி ஆகும் போதோ, அது நேரடியாக  அனைத்து ராசிகளையும்  பாதிக்கிறது. மேலும்,  ஒரு கிரகம் உச்சம் பெற்றால் நூறு சதவிகித பலன் கிடைக்கும் என்பதும் நீசம் பெற்றால் பூஜ்யம் பலன்தான் கிடைக்கும் என்பதும் ஜோதிட விதி. ஆனால்,  விதி விலக்கு என்று ஒன்று உண்டு. நீச்சம் பெற்ற கிரகம் நீச பங்கம் பெறும் போது மிகவும் வலுவான நிலையை அடைந்து அபரிமிதமான பலனைத் அள்ளித் தருகிறது. இந்நிலையில் சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால், நீச்ச பங்க ராஜயோகம் உருவாகியுள்ளது. இது எல்லா ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், சூரிய பகவானின் அளவற்ற அருள், குறிப்பிட்ட மூன்று ராசிகளின் மீது பொழியும். இந்த ராசிக்காரர்கள் வேலையில், தொழிலில், வியாபாரத்தில், தனிப்பட்ட வாழ்க்கையில் என அனைத்திலும் வெற்றியைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துலாம்: நீச பங்கம்  ராஜயோகத்தினால், இந்த ராசிக்காரர்களின்  வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நன்மை உண்டாகும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த நேரத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறலாம். அதாவது எந்த தேர்விலும் வெற்றி பெற முடியும்.  புதிய வேலை வாய்ப்பு வரக்கூடும். இது தவிர, திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராஜயோகப் பெயர்ச்சியானது ஜாதகரின் லக்னத்தில் அமைவதால், வருமானம் பெருகும், நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலையும் முடியும்.


மகரம்: பத்தாம் இடமான மகர ராசியில் நீச்ச பங்க ராஜயோகம் உருவாகி வருகிறது. இது தொழில் மற்றும் வியாபார ரீதியாக வெற்றிகளை தேடித் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வியாபாரம் பெருகுவதுடன், பல நாட்களாக முடங்கிக் கிடக்கும் திட்டங்களைச் செயல்படுத்தலாம். கன்னிப் பெண்களுக்கு திருமண உறவுகள் வரலாம்.


மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் உருவாகிறது. இந்த ராசிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான்காவது வீடு தாயின் வீடாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் வணிகத்தில் முதலீடு செய்யலாம். பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகளும் அமையும்.  வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. சொத்து, வாகனங்கள் வாங்குவது பற்றியும் யோசிக்கலாம். மொத்தத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ