Lord Shani Lucky Day : ஆகஸ்ட் 8, 2024 தினமான இன்று, 888 என்ற அற்புதமான தற்செயல் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. எண் கணிதத்தின்படி எண் 8 என்பது மிகவும் அதிர்ஷ்டமான எண் ஆகும். ஜோதிடத்தில், 8 என்பது சனியின் எண்ணாகக் கருதப்படுகிறது. வியாழக்கிழமையன்று சனிக்கு உகந்த எண்ணான 8 என்ற ஆதிக்கத்தில் வரும் ஆகஸ்ட் 8 மிகவும் ராசியான நாளாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எண் கணிதம் ஒரு நபரின் வாழ்க்கையில் கணித விதிகளைப் பயன்படுத்தில் அதிருஷ்டம், துரதிருஷ்டத்தை கணிக்கிறது. எண் கணிதத்தில் ஒற்றைப்படை எண்களான 1 முதல் 9 வரையிலான எண்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு கிரகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அதேபோல இந்த ஒன்பது எண்களுக்கும் தனித்துவமான அம்சங்களும் உண்டு.


2024 ஆகஸ்ட் 8


இன்று 8 ஆம் தேதி, 8 ஆம் மாதம் ஆகஸ்ட் என்றால் 2024 என்ற ஆண்டின் கூட்டுத்தொகை 8 (2+0+2+4=8) ஆகும். இந்த வழியில் இன்றைய தேதி 888 என்று வருகிறது. 888 மிகவும் சக்திவாய்ந்த அதிர்ஷடமுள்ள எண்ணாகக் கருதப்படுகிறது, இந்த எண், மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றுகிறது. 888ன் சேர்க்கை கொண்ட இந்த நாள், எந்தெந்த ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம். 


சனியின் எண் 8


ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஆளும் கிரகங்கள் இருப்பது போல், எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்ணை ஆளும் கிரகங்கள் உள்ளன. எண் 8க்கு அதிபதி சனி. மிகவும் சக்தி வாய்ந்த கிரகமான சனீஸ்வரரின் அருட்பார்வையால் இன்றைய தினம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.  


மேலும் படிக்க | இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போகும் ராசிகள்


சனிக்கு உகந்த ராசிகள்


துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் சனீஸ்வரருக்கு உகந்தவை. சனி துலாம் ராசியில் உச்சம் பெற்றவர், மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியாக திகழ்பவர். எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களும் சனியின் அருட்கடாட்சத்தைப் பெறுபவர்கள். இன்று சனிக்கு உகந்த மகரம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் ராசியான நாள்.


மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது ஏழரைச் சனி நடப்பதால், இவர்கள் சனிபகவானை மகிழ்விக்க சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். கருப்பு எள், கருப்பு துணி, கருப்பு காலணிகள் மற்றும் செருப்புகள், கருப்பு உளுந்து, குடை என சனி தொடர்பான பொருட்களை தானம் செய்வது நல்லது.


லயன் கேட் போர்டல் என்றால் என்ன?


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் பூமி, சிரியஸ், ஓரியன் ஆகிய விண்மீன்கள் ஒரே வரிசையில் வரும். இது ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாகும், இது லயன் கேட் போர்டல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வானியல் நிகழ்வு சக்திவாய்ந்த ஆற்றலின் போர்ட்டலை உருவாக்குகிறது. சூரியனை அதிபதியாக கொண்ட லயன் கேட் போர்டல் (Lion's Gate Portal) இன்று உருவாகியுள்ளது.  


மேலும் படிக்க | சனி நிகழ்த்த போகும் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ