நவகிரகங்களில் சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயரும் நிகழ்வு சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குள் நுழைவது என்பது, ஒரு ஆண்டில் 12 முறை நிகழ்கிறது. பொதுவாக மகர சங்கராந்தி என்பதை அனைவரும் அறிவோம். இது தை மாத பிறப்பைக் குறிக்கும். மகர சங்கராந்தியைத் தவிர, மற்ற 11 சங்கராந்திகளின் பெயர் என்ன? சங்கராந்தியின் முக்கியத்துவம் மற்றும் வழிபடும் முறைகளைத் தெரிந்துக் கொள்வோம்.
ரூப சங்கரந்தி, அசோக சங்கராந்தி, கடக சங்கராந்தி, போக சங்கராந்தி, லவண சங்கராந்தி, செளபாக்கிய சங்கராந்தி, தனுசு சங்கராந்தி, மகர சங்கராந்தி, தேஜ சங்கராந்தி, ஆயுள் சங்கராந்தி, தாம்பூல சங்கராந்தி, மனோரத சங்கராந்தி, தான்ய சங்கராந்தி
தமிழ் ஆண்டின் முதல் சங்கராந்தி தான்ய சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. இது சித்திரை மாத பிறப்பை குறிக்கும் சங்கராந்தி ஆகும். சூரியன் மேஷராசியில் நுழையும் தான்ய சங்காராந்தியன்று சூரியனை வணங்கி, தானங்கள் வழங்குவது நல்லது. சித்திரை மாத சங்கராந்தியின் பெயரே குறிபிடுவது போல, அன்று தானியங்களை தானம் செய்யலாம்.
வைகாசி மாதத்தை உருவாக்கும் சங்கராந்தி, தாம்பூல சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. ரிஷப ராசியில் சூரியன் நுழைவதால் உருவாகும் தாம்பூல சங்கராந்தி நாளில் சூரியனை வணங்கி, பிறருக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து மரியாதை செய்வது விசேஷமானது.
சூரியன் மிதுன ராசியில் நுழையும்போது ஏற்படும் சங்கராந்தி, மனோரத சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆனி மாதத்தை உருவாக்கும் மனோதர சங்கராந்தி நாளில் சூரியனை வணங்கி, இனிப்பு பொருட்களை தானம் செய்வதால், மனதில் நினைக்கும் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கடக ராசிக்கு சூரியன் வருகை தரும்போது உருவாகும் ஆடி மாத சங்கராந்தி, அசோக சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளன்று செய்யும் தானங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும். சூரியன் சிம்ம ராசியில் நுழையும்போது ஏற்படும் சங்கராந்தி ரூப சங்கராந்தியில் அளிக்கப்படும் தானங்கள் குடும்பத்தில் நிம்மதியை உருவாக்கும்.
சூரியன் கன்னி ராசியில் நுழையும்போது ஏற்படும் சங்கராந்தியை தேஜ சங்கராந்தி என்று அழைபார்கள். புரட்டாசி மாதத்தை உருவாக்கும் இந்த தேஜ சங்கராந்தியின்போது வேதியர்களுக்கு தானம் செய்வது, முன்னோர்களுக்கு போய் சேரும் என்பது ஐதீகம். சூரியன் துலாம் ராசியில் நுழையும் சங்கராந்திக்கு ஆயுள் சங்கராந்தி என்று பெயர். ஐப்பசி மாதத்தை உருவாக்கும் இந்த சங்கராந்தியன்று பசும்பால் வெண்ணெய் இவற்றை தானம் கொடுத்தால், ஆயுள் விருத்தியாகும்.
சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் சங்கராந்திக்குக் சௌபாக்கிய சங்கராந்தி என்று பெயர். கார்த்திகை மாதத்தை உருவாக்கும் இந்த சௌபாக்கிய சங்கராந்தி நாளன்று சூரியனை வணங்கி, உப்பு தானம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.
மார்கழி மாதத்தை உருவாக்கும் தனுசு சங்கராந்தி நாளன்று சூரியன், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் செல்வார். இந்த மாதம் அன்னதானம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும். சூரியன் மகர ராசியில் நுழையும் நாளை
மகர சங்கராந்தி என்று அழைப்போம். தை மாதத்தை உருவாக்கும் மகர சங்கராந்தி, தேவர்களுக்கு விடியல் காலம் ஆகும். பன்னிரெண்டு சங்கராந்திகளில் மகர சங்கராந்தி மிகவும் சிறப்பானது.
சூரியன் கும்ப ராசியில் நுழையும் சங்கராந்திக்கு லவண சங்கராந்தி என்று பெயர், இந்த நாளில் செய்யும் தானங்களும் பூஜைகளும் மோட்சத்தைக் கொடுக்கும். சூரியன் மீன ராசியில் நுழைவதை போக சங்கராந்தி என அழைப்பார்கள். பங்குனி மாதத் தொடக்கத்திற்கு காரணமாகும் இந்த சங்கராந்தியின்போது எந்த தானம் செய்தாலும் அது இருமடங்காக பலனளிக்கும்.
சங்கராந்தி என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனை வணங்கும் இந்த நன்னாளில் செய்யப்படும் தானங்களும், இறைவழிபாடும் வாழ்க்கையை வளமாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ