குரு பகவானின் உதயம் 2023: குரு பகவான் ஏப்ரல் 27 ஆம் தேதி, அதாவது இன்று காலை மேஷ ராசியில் உதயமானார். குரு எப்போதும் நன்மை தரும் கிரகமாக கருதப்படுகிறார்.  அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் கிரகத்தின் ராசியான மேஷத்தில் பூச நட்சத்திரத்தில் குரு உதயமானது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மேஷ ராசியில் குரு உச்சம் பெறுவதால் உடல் மற்றும் மன மகிழ்ச்சி உண்டாகும். இதனுடன், இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையும் மிகவும் வலுவாக இருக்கும். மேஷ ராசியில் பூச நட்சத்திரத்தில் குரு உதயமானது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி


மேஷ ராசியில் தான் குரு உதயமாகியுள்ளார். குரு மேஷத்தில் உச்சம் பெறுவதால், இந்த காலம் உங்கள் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முழுமையாக திருப்தி அடைவீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறலாம். 


இதுமட்டுமின்றி, மூத்த அதிகாரிகளும் உங்கள் பணிக்கு ஊக்கமளிப்பார்கள். அவர்களது முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த காலத்தில் புதிய நபர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில பெரிய பண பலன்களைப் பெறலாம். பொருளாதாரத்தில் குருவின் எழுச்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மிதுன ராசி


மிதுன ராசிக்காரர்களுக்கும் குரு மேஷத்தில், பூச நட்சத்திரத்தில் உதயமானதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களுக்குப் பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகள் பிறக்கும். இந்த நேரத்தில், வணிகர்களுக்கும் நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பல இடங்களிலிருந்து பண வரவுக்கான வாய்ப்புள்ளது. 


அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபத்தைப் பெற முடியும். இந்த நேரத்தில், உங்கள் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் மூதாதையர் சொத்திலிருந்து லாபம் கிடைக்கும். 


கடக ராசி


கடக ராசிக்காரர்களுக்கு மேஷ ராசியில் குரு உச்சம் பெறுவது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணருவீர்கள். இதன் காரணமாக பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கௌரவம் இப்போது அதிகரிக்கும்.


இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் ஆதரவால், ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகின்றன. மேலும் உங்களுக்கு பல சிறந்த வாய்ப்புகளும் கிடைக்கும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் அதிகரிக்கும், கவனம் தேவை


தனுசு ராசி


குருவின் உதயத்தால், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் பலனளிக்கும். இந்த காலத்தில், நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்திலும் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறப் போகிறீர்கள். 


தொழில் ரீதியாக இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் திருப்தி அடைவீர்கள். உங்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த நேரத்தில், உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில புதிய விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.


மீன ராசி


மேஷ ராசியில், பூச நட்சத்திரத்தில் குரு உதயம் ஆனதால், மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இது மட்டுமின்றி சொத்திலும் முதலீடு செய்வீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் வீட்டில் சில சுப காரியங்களும் நடக்கும். 


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன் காரணமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்கள். உங்கள் நிதி நிலையும் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதிலும் முதலீடு செய்வதிலும் வெற்றி பெறுவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியால் உருவாகும் சிறப்பு யோகம்... இந்த ராசிகளுக்கு வருமானம் பெருக வாய்ப்புகள் அதிகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ