சனியால் உருவாகும் சிறப்பு யோகம்... இந்த ராசிகளுக்கு வருமானம் பெருக வாய்ப்புகள் அதிகம்!

Shash Mahapurush Yoga Benefits: சனி பகவான் கும்பத்தில் நுழைந்து, இந்த நேரத்தில் ஷஷ மகாபுருஷ் யோகம் உருவாகியது. அப்படிப்பட்ட சூழலில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இது பலன் தரும் என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 27, 2023, 03:57 PM IST
  • சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
  • ஒருவரின் நன்மை தீமைகளை கணக்கிட்டு சனி பகவான் பலன்களை தருவார்.
  • கடந்த ஜன. 17 ஆம் தேதி, சனி பகவான் கும்பத்தில் நுழைந்தார்.
சனியால் உருவாகும் சிறப்பு யோகம்... இந்த ராசிகளுக்கு வருமானம் பெருக வாய்ப்புகள் அதிகம்! title=

Shash Mahapurush Yoga Benefits: ஜோதிடத்தில், நீதியின் கடவுளாக சனி பகவான் கருதப்படுகிறார். அவர் கர்மாவை வழங்குபவர் என்றும் அறியப்படுகிறார். சனி பகவான் ஒருவரின் நன்மை தீமைகளை கணக்கிட்டு அதற்கேற்ற பலன்களை கொடுப்பதாக கூறப்படுகிறது. 

சனி மெதுவாக நகரும் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. சனி பகவானுக்கு யார் மீது கருணை உள்ளதோ, அவர் அவர்களை அரசர்களாக ஆக்குகிறார். 

ஆனால் சனி பகவான் ஒருவர் மீது கோபமாக இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையை பிரச்சினைகள் சூழ்ந்து கொள்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி சனியின் திசை ஏழரை வருடங்கள் நீடிக்கும். இதன் போது, அந்த ராசியினர் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த ஜன. 17 ஆம் தேதி, சனி பகவான் கும்பத்தில் நுழைந்து, இந்த நேரத்தில் ஷஷ மகாபுருஷ் யோகம் உருவாகியது. அப்படிப்பட்ட சூழலில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இது பலன் தரும் என்பதை இதில் காணலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஷஷ் மஹாபுருஷ் யோகம், ரிஷப ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. இந்த யோகத்தின்போது, இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். 

30 மாதங்களில் இந்த ராசிக்காரர்கள் பல பண பலன்களை பெறுவார்கள். இந்த நேரத்தில், வேலை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுமட்டுமின்றி, வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த யோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் அதிகமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

மேலும் படிக்க | மே மாத ராசிபலன் 2023: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை

துலாம்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்கலாம்.அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். இதன் போது இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். பல புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். கடின உழைப்பு எதுவாக இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். உங்கள் வேலையில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

இதன் போது மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் பணித் துறையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் பணிகள் பாராட்டப்படும். மூத்த அதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்

ஷஷ் மஹாபுருஷ யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் கவனம் உங்களை நோக்கி ஈர்க்கப்படும். பதவி கௌரவம் அதிகரிக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.

கும்பம்

இந்த யோக பலன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் மாற்றங்களைச் செய்யலாம். கடின உழைப்பில் வெற்றி கிடைக்கும். துறையில் வருமானம் பெருக வாய்ப்புகள் அதிகம். தொழில் வளர்ச்சிக்கு முழு வாய்ப்பு உண்டு. உங்கள் விருப்பப்படி வேலை கிடைக்கும். பதவி உயர்வுடன் சேர்த்து அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு - ராகு சேர்க்கை வந்தாச்சு சண்டால யோகம்..! மகாலட்சுமி ஆசியே இருக்காது..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News