நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி தேவன் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். மற்ற கிரகங்களைப் போல இல்லாமல் சனி பகவான் மட்டும் தான், தான் இருக்கும் ராசியைத் தவிர, அந்த ராசிக்கு முன்னரும் பின்னரும் இருக்கும் ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதனால் தான் ஏழரை சனி என்று கணக்கிடும்போது, சனி இருக்கும் ராசி, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய ராசிகள் என மொத்தம் மூன்று ராசியினருக்கு ஏழரை சனி என்று சொல்வார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவரின் ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனி பெயர்ச்சியடையும் போது ஏழரை சனி தொடங்கிவிடும். உதாரணமாக மேஷ ராசிக்கு சனி பெயர்ச்சியானால், ரிஷப ராசிக்கு ஏழரை சனி தொடங்கிவிடும். சனீஸ்வர பகவான் இருக்கும் ராசிக்கு முந்தைய ராசியில் இரண்டரை வருடம், இருக்கும் ராசியில் இரண்டரை வருடம், அதற்கு அடுத்த ராசியில் இரண்டரை வருடம் என என மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கம் இருக்கும்.  


சனி இருக்கும் ராசிக்கு ஜென்மச் சனியாகவும், அதற்கு முந்தைய ராசிக்கு பாத சனியாகவும், இருக்கும் ராசிக்கு அடுத்த ராசிக்கு விரயச் சனியாகவும் இருப்பார். விரயச் சனி இரண்டரை ஆண்டுகள், ஜென்ம சனி இரண்டரை ஆண்டுகள், பாத சனி இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் சனி பகவானின் தாக்கம் மூன்று ராசிகளுக்கு இருக்கும். 


மேலும் படிக்க | இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போகும் ராசிகள்


தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். சனீஸ்வரர் தான் கும்பம் ராசிக்கு அதிபதி. தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனீஸ்வரர் ஜென்ம சனியாக இருந்து, பூர்வ புண்ணியம் கர்ம வினைகள் என அனைத்தையும் நேர் செய்வார். சனீஸ்வரர் ஒருவருக்கு அதிக கஷ்டத்தைக் கொடுக்கும் காலம் ஜென்மச் சனியாக இருக்கும். 


மார்ச் 29, 2025 வரை கும்ப ராசியில் இருக்கும் சனி அதன் பிறகு மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். மீன ராசியில் சனி பிரவேசித்தவுடன் கும்ப ராசியில் சனியின் ஜென்ம சனி முடிவடைந்து பாத சனியான மூன்றாம் கட்டம் தொடங்கும். பொதுவாக ஏழரை சனியின் மூன்றாம் கட்டம் பலருக்கு நன்மையைத் தரும்.


ஏனென்றால், ஜென்ம சனி காலத்தில் ஒருவரின் கர்மாக்களின் பலனை அனுபவிக்க செய்து கர்மாவை சீர் செய்யும் சனீஸ்வரர், இரண்டரை ஆண்டு காலம் ஒருவர் பட்ட கஷ்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவரின் புண்ணியத்திற்கான  பலனைத் தருவார். அந்த வகையில், கும்ப ராசிக்கு அதிபதியாக இருக்கும் சனி, பாத சனியாக மாறும்போது பல நன்மைகளையும் அருளையும் வழங்குவார். 


மேலும் படிக்க | சனி நிகழ்த்த போகும் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி


கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி  2025 மார்ச் 29ம் தேதியும், பாத சனி 2027 ஜூன் 3ம் தேதியும் முடிவடைகிறது. எனவே கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். கும்ப ராசிக்காரர்கள் சனீஸ்வரரை வணங்கி வருவதுடன், தங்களது ராசியாதிபதியான சனியை மகிழ்விக்க செய்யும் வழிபாடுகள் நல்ல பலனைத் தந்து, வாழ்க்கையில் நிம்மதியைத் தரும்.


கும்ப ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்


1. ஆதரவற்ற, முதியோர், பெண்கள் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்களுக்கு உதவுவதால் சனி பகவான் மனம் மகிழ்வார் 


2. சனிக்கிழமையன்று கடவுள் வழிபாடு நல்லது. சிவனை வணங்குவதுடன், மாலையில் சனிஸ்வரருக்கு எள்ளெண்ணெய் தீபம் போடுங்கள். 


3. பசித்திருப்பவர்களின் பசியைப் போக்க அன்னதானம் செய்யுங்கள்.


4. சனிக்கிழமை சிவனுக்கு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்தால் சிவனருளுடன் சனீஸ்வரரின் அருளும் கிடைக்கும். 


சனிக்கிழமையன்று தேவைப்படுபவர்களுக்கு போர்வைகள், செருப்புகள் என ஆரோக்கியத்தை காக்கும் பொருட்களை தேவைப்படும் ஏழைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்.  


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனிக்கு பிடித்தமான 2024 ஆகஸ்ட் 8! ஏன் எப்படி? இது எண் கணித ஜோதிடம் சொல்லும் ஜோசியம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ