குரு உதயம் 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, குரு பகவான் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இந்த வகையில் 12 ராசிகளின் சுழற்சியை முடிக்க அவருக்கு 12 ஆண்டுகள் ஆகும். ஏப்ரல் 22 அன்று, தேவகுரு பிருஹஸ்பதி ஒரு ராசி சுழற்சியை முடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் நுழைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பகவான் தனது ராசியை மாற்றுவதற்கு முன் அஸ்தமனமானார். குரு பெயர்ச்சியான பிறகு ஏப்ரல் 27 ஆம் தேதி அவர் உதயமானார். இதனால் குரு அஸ்தமனமானதால் சுப காரியங்களுக்கு இருந்த தடை நீங்கிவிட்டத்து. இப்போது திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான நல்ல வேளை துவங்கிவிட்டது. 


மறுபுறம் மேஷ ராசியில் குருவின் உதயத்தால் மகாதன யோகம் உருவாகி வருகிறது. இந்த மஹாதன யோகம் அன்னை லக்ஷ்மியின் அருளைப் பெறவும், செல்வ வளம் பெறவும் மிகவும் உகந்தது. குருவின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 
 
மேஷ ராசி: 


மேஷ ராசியில் குரு பெயர்ச்சியும் குரு உதயமும் நிகழ்ந்துள்ளன. இதனால் உருவாகும் மஹாதன யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்கள் அமோகமான பண வரவை பெறுவார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். நீங்கள் விரும்பிய பதவி அல்லது பொறுப்பைப் பெறலாம். தொழிலில் வெற்றி பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்புகள் ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். சுபமான நிகழ்வுகள் நடக்கும். மரியாதை அதிகரிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். உங்கள் நல்ல குணத்தால் பிறரை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள்.


மேலும் படிக்க | இன்னும் 2 நாட்களில் தொடங்கப்போகும் ஜேஷ்ட மாதம்... இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்...!


கடக ராசி: 


கடக ராசிக்காரர்களுக்கு மகாதன ராஜயோகம் பெரும் பண பலன்களைத் தரும். இவர்களுக்கு அனைத்து வேலையிலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. கையில் பணம் கிடைத்த மகிழ்ச்சியை உணர்வீர்கள். வியாபாரத்திலும் பண ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக மெற்கொள்வீர்கள். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும்.


தனுசு ராசி:


தனுசு ராசிக்காரர்களுக்கு மகாதன ராஜயோகம் வரப்பிரசாதமாக அமையும். நீண்ட நாள் வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு லாபம் ஈட்டுவீர்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க நினைத்தவர்களின் கனவு நிறைவேறும். கல்வித் துறையில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்கள் அமைவார்கள்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மே மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வம் பெருகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ