Guru Nakshatra Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகளை தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இவை அனைத்திலும் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக சுபமான கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜூன் 13ஆம் தேதி குரு நட்சத்திர பெயர்ச்சி அடையவுள்ளார். குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அத்கப்படியான நன்மைகள் நடக்கும். பண வரவு அதிகமாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


குருவும் சந்திரனும் இணைவது கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாகத்தான் சந்திரனின் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி ஆவது சுபமாக கருதப்படுகின்றது. குரு நட்சத்திர பெயர்ச்சியால் அதிகப்படியான பலன்களை அடையவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம் (Aries)


குரு நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். பண வரவு அதிகமாகும். இதன் காரணமாக நிதி நிலை மேம்படும். இந்த காலத்தில் செலவுகள் குறைவாகவும் வருமானம் அதிகமாவும் இருக்கும். அதனால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்து கொண்டிருந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். காதல் உறவுக்கு குடும்ப அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகம், வியாபாரம், குடும்பம் போன்றவற்றில் நல்ல பலன்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சனி அருளால் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோ


மிதுனம் (Gemini)


இந்த குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் பொருளாதார வெற்றியை அடைவார்கள். வேலையை மாற்ற விரும்பினால், இந்த நேரம் அதற்கு சாதகமானதாக இருக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இப்போது நல்ல வேலை கிடைக்கும். படிப்பிற்காக பயணம் செய்யும் மாணவர்களும் வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்த விரும்பினால் இதுவே சரியான நேரம்.


கடகம் (Cancer)


குரு நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். இந்த காலகட்டத்தில் சிறு முயற்சிகள் கூட வெற்றியைத் தரும். தந்தையின் உதவியால் நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேறும். வீட்டில் இருந்த சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். மன உளைச்சல் நீங்கும். உடல்நிலை குறித்து இப்போது எந்த டென்ஷனும் தேவையில்லை. உடல் ஆரோக்கியம் குருவின் அருளால் மிக நன்றாக இருக்கும். 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | லட்சுமி நாராயண யோகத்தால் நினைத்தது நடக்கும்! தொட்டது துலங்கும்! ஜாலியாகும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ