லட்சுமி நாராயண யோகத்தால் நினைத்தது நடக்கும்! தொட்டது துலங்கும்! ஜாலியாகும் ராசிகள்!

Laxmi Narayan Yog June 2024 : கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் ராசி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஜூன் 14ஆம் தேதி லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாக உள்ளது... 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2024, 11:49 PM IST
  • கிரகப் பெயர்ச்சிகளால் ஏற்படும் மாற்றங்கள்
  • ஜூன் 14ஆம் தேதி லக்ஷ்மி நாராயண ராஜயோகம்
  • லக்ஷ்மி நாராயண ராஜயோகம் யாருக்கு பலன் தரும்?
லட்சுமி நாராயண யோகத்தால் நினைத்தது நடக்கும்! தொட்டது துலங்கும்! ஜாலியாகும் ராசிகள்! title=

ஒன்பது நவகிரகங்களும் அவ்வப்போது ராசிகளை மாற்றுகின்றன. இதனால் பல சுப, ராஜ யோகங்கள் மற்றும் தோஷங்கள் உருவாகின்றன. சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் இந்த கிரக மாற்றங்கள், சிலருக்கு துன்பத்தைக் கொடுக்கும்.  ஜூன் 12ம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ள சுக்கிரன் சுகத்தைக் கொடுக்கும் கிரகம் ஆவார்.

கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் ராசி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஜூன் 14ஆம் தேதி லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். அதிலும் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும். இதனால், 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். 

சுக்கிரன் பெயர்ச்சியான இரண்டு நாட்களுக்குப் பிறகு, புதன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரனும், புதனும் மிதுனத்தில் இணைவதால் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகப் போகிறது.

லக்ஷ்மி-நாராயண யோகம் 

புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் பற்றி தெரிந்துக் கொள்வோம். புத்திசாலித்தனம், ஞானம் மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்குபவர் புதன் என்றால், அழகு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவர் சுக்கிரன் கிரகம். இந்த இரண்டு கிரகங்களுக்கும் இடையிலான இணக்கமான உறவு, வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அளிக்கும் இந்த லட்சுமி நாராயண யோகம் மிகவும் மங்களகரமான யோகம் ஆகும்.

மேலும் படிக்க | நாளை சுக்கிரன் பெயர்ச்சி! சுக்கிரனின் ராசி மாற்றத்தில் பணத்தை இழக்கப்போகும் ராசிகள்!

இந்த யோகத்தின் பலன்களை அறுவடை செய்யப் போகும் அதிர்ஷ்ட ராசிகளில் (Lucky Zodiacs) உங்களுடைய ராசியும் உள்ளதா? விரிவாக தெரிந்து கொள்வோம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் மிகவும் சாதகமாக அமையும். இந்த ராஜயோகம், மிதுன ராசியில் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் ஆளுமைப் பண்பு மேம்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டு. முகத்தில் தெளிவும் மிடுக்கும் தோன்றும் என்றால், தோற்றப்பொலிவும் கூடும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திருமணத்திற்கு வரன் பார்த்து வருபவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும் யோகத்தை லட்சுமி நாராயண யோகம் கொடுக்கும்.  

சிம்மம் 

லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். வருமானம் அதிகரிக்கும், நிதி ஆதாயம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் சுலபமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபமான காலம் இது. இப்போது செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் பல மடங்கு பலன்களைத் தரும் என்பதால், முதலீடுகளில் கவனம் செலுத்தவும்.

மேலும் படிக்க | மிதுன ராசியில் புதன் சஞ்சாரம்! ஜூன் 14 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நீங்கள் தானா?

கன்னி  

கன்னி ராசிக்காரர்களின் கர்ம வீட்டில் லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் உருவாகப் போகிறது என்பதால், கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழில், வியாபாரம் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பல நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பணப் பிரச்சனைகள் தானாகவே மறையும். வாராக்கடனாக உங்களை வருத்தி, நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட இந்தத் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News