சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சனி அருளால் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோ

Sani Vakra Peyarchi Palangal: சனி பகவான் ஜூன் 30, 2024 அன்று வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து 12 ராசிகளிலும் இதனால் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Sani Vakra Peyarchi Palangal: சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். இந்த நிகழ்வு சனிப்பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ராசி தவிர சனிபகவானின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. சனி பகவான் ஜூன் 30 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.  

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு வேலைக்கும் வருமானத்திற்கும் அதிபதி சனி. சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியிருக்கலாம். குழந்தைகளைப் பற்றிய கவலை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 

2 /13

ரிஷபம்: அதிர்ஷ்டம் மற்றும் கர்ம வினைகளின் கிரகமான சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அளிப்பார். சனி வக்ர பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலையின் போது கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால், இந்தக் காலகட்டத்தில் திடீரென்று புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உங்கள் வருமானம் கூடும். இந்த காலகட்டத்தில், உங்கள் லாபம் அதிகரிக்கும். பொறுப்புகளை விட்டு ஓடாதீர்கள், பொய் மற்றும் வஞ்சகத்திலிருந்து விலகி இருங்கள். இடமாற்றம் ஏற்படலாம். அதிக அக்கறையுடன் இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் பணிகளால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். 

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உங்கள் மதிப்பையும் மரியாதையையும் பாதுகாக்க மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும். புதிய பணிகளை மேற்கொள்ளும் முன் நன்கு ஆராய்ந்து, ஆலோசித்து, அதன் பின் அவற்றை செய்யவும். வேலை இடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.   

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். எனினும், இந்த காலத்தில் சற்று கவனமாக இருப்பதும் நல்லது. தொலைதூரப் பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். 

6 /13

கன்னி: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களை விட்டு நோய்கள் விலகும், எதிரிகள் விலகுவார்கள். லட்சுமி அன்னையின் கடாஷம் இருக்கும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. 

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். பழைய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். 

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியால் சுப பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் சில பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் மாற்றம் ஏற்படும். சனி பகவான் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்தால் திடீரென்று புதிய பாதைகள் திறக்கும்.

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். வேலையில் வளர்ச்சி இருக்கும். மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் தானம் செய்தால் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கும்.

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள்.புதிய பணிகளை துவக்க இது சரியான நேரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். 

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி கலவையான பலன்களைத் தரும். வெளியூர் தொடர்பான வேலைகள் முடிவடையும். வளர்ச்சியும் இருக்கும். ஆனால் சலசலப்பு அதிகரிக்கும். கால், எலும்பு சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். 

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியால் செலவுகள் கூடும். பண வரவு இருக்கும், ஆனால் செலவுகளும் அதிகமாக இருக்கும். நோய்களில் நிவாரணம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.