Favourite Zodiac Signs of Lord Guru: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து கிரகங்களும் பெயர்ச்சி அடைந்தாலும் சனி பகவானின் பெயர்ச்சியும் குரு பகவானின் பெயர்ச்சியும் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சனி பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும் மிக முக்கிய ஜோதிட நிகழ்வுகளாகும். மே ஒன்றாம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். தற்போது மேஷ ராசியில் இருக்கும் குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆவார். குரு பகாவின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 


குரு பகவான் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் அனைவருக்கும் அருளை வாரி வழங்குகிறார். வியாழக்கிழமை குரு பகவானுக்கான விசேஷ நாளாக கருதப்படுகின்றது. வியாழனன்று குரு பகவானை வணங்கினால் அவரது சிறப்பு அருள் கிட்டும். அறிவு, புத்திசாலித்தனம், புகழ், கல்வி, திருமண வாழ்க்கை, மரியாதை ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் குரு. அவரது அருள் இல்லாமல் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது. ராசிகளில் தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாகவும், நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவற்றின் அதிபதியாகவும் அவர் உள்ளார். குரு கடகத்தில் உச்சம் பெற்றும் மகரத்தில் நீச்சமாகவும் உள்ளார்.


குரு பகவான் பாரபட்சமின்றி அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஒரே விதமாக தன் ஆசியை வழங்குகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் மீது குரு பகவான் விசேஷ அருளை பொழிகிறார். இவர்களுக்கு வாழ்க்கையில் செல்வம், மகிழ்ச்சி, கல்வி ஆகியவற்றிற்கு குறைவே இருப்பதில்லை. அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்,


தனுசு (Sagittarius): 


குரு பகவான் தனுசு ராசிக்காரர்கள் மீது விசேஷ அருளை பொழிகிறார். தனுசு ராசிக்கு அதிபதி குரு. இந்த ராசிக்காரர்களுக்கு வியாழனின் அருள் எப்போதும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் எதிர்மறையான கண்ணோட்டத்துடன் இருக்கிறார்கள், குருவின் அருளால் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுகிறார்கள். 


மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சக்கைப்போடு போடவுள்ள ராசிகள் இவைதான்... உங்க ராசி என்ன?


தனுசு ராசிக்காரர்கள் பொதுவாக புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் பணிபுரியும் அனைத்து துறைகளிலும் வெற்றியை காண்கிறார்கள். பணியிடத்தில் இவர்களது பணி பாராட்டப்பட்டு குறிப்பிடத்தக்க வகையில் அங்கீகரிக்கப்படுகின்றது. வணிகத்தில் ஈடுபடும் தனுசு ராசிக்காரர்கள் அதிக லாபம் காண்கிறார்கள். குரு அருளால் பொதுவாக தனுசு ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பையும் புரிதலையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.


மீனம் (Pisces):


குரு பகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் மீன ராசியும் ஒன்று. குரு அருள் இருப்பதால் மீன ராசிக்காரர்கள் மீது மற்ற கிரகங்களின் அசுப தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். எதிர்மறையான தாக்கங்களிலிருந்து குருபகவான் மீன ராசிக்காரர்களை எப்பொழுதும் காப்பாற்றுகிறார். 


குருவின் அருளால் மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கின்றது.. படிப்பில் நாட்டம் மிக்கவர்களாக திகழ்கிறார்கள். பணியிடத்திலும் வியாபாரத்திலும் அனைவரையும் விட அதிகமான வெற்றிகளை பெறுகிறார்கள். சொத்து சேர்ப்பதிலும் இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் இவர்களுக்கு கிடைக்கிறது. குரு அருளால் இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வகையிலான குணாதிசயங்களை கொண்டிருக்கிறார்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உதயமானார் சனி: இந்த ராசிகளுக்கு இனி சுகம் மட்டுமே... சோதனைகளை விரட்டிவிட்டார் சனி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ