சுக்கிரன் புதனுடன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்! அதிர்ஷ்டத்தால் மகிழும் ராசிகள்!
Surya Peyarchi On June 15 : மிதுன ராசியில் பிரவேசிக்கும் சூரியன், சுக்கிரன் மற்றும் புதனுடன் இணைவதால் முக்கிரகங்களின் இணைவு ஏற்படுகிறது. அத்துடன் புதாதித்ய யோகத்தையும் ஏற்படுத்துகிறது...
உத்தராயன புண்ணிய காலத்தின் கடைசி மாதமான ஆனி மாதம் தேவர்களின் மாலைப் பொழுது என்பது இந்து மத நம்பிக்கை. கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூன் 15 அன்று தனது ராசியை மாற்றி மிதுன ராசிக்குள் நுழையப் போகிறார். சூரியனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களையும் பெரிய முன்னேற்றத்தையும் தரும்.
மாதந்தோறும் ராசி பெயர்ச்சியாகும் சூரியன் மாறும் நாள் தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஜூன் மாதத்தில் சூரியப் பெயர்ச்சி 15ம் தேதியன்று நடைபெற உள்ளது. ஜூன் 15ஆம் தேதி அதிகாலை 4:27 மணிக்கு சூரியன் மிதுன ராசிக்கு மாறுகிறார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் பிரவேசிக்கும் சூரியன் ஒரு மாதம் புதனின் ராசியான மிதுன ராசியில் சஞ்சரிப்பார்.
சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் நல்லதும் கெட்டதுமாக வெவ்வேறு பலன்களைக் கொடுக்கும். 5 ராசிக்காரர்களுக்கு ஆனி மாதம் நிறைவானதாக இருக்கும். தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ஆதாயம் கிடைக்கும். சூரியனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிகளில் சாதகமான பலனைத் தரும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஆனி மாதம் வரப்பிரசாதமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்தும் கௌரவமும் கூடும். ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும், மனதில் நிம்மதி இருக்கும்.
மேலும் படிக்க | ராகு தோஷத்தை போக்கும் பரிகாரங்கள்! எந்த கோவிலில் வழிபட்டால் தோஷநிவர்த்தியாகும்?
சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் மிதுன ராசியில் இருப்பது உங்களுக்கு வெற்றியைத் தரும் சூரியப் பெயர்ச்சி, நட்பை அதிகரிக்கும். இதுவரை போராடிய போராட்டங்கள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கும் நல்ல நேரம், கடினமாக உழைக்கத் தயாராக இருக்கும் சிம்ம ராசியினருக்கு இப்போது சிறிய முயற்சிகளிலேயே வெற்றி வந்து சேரும்.
கன்னி: சூரிய பகவானின் பெயர்ச்சி, அற்புத பலன்களைத் தரும். எதிர்பார்த்திராத பணவரவு மகிழ்ச்சி கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவதோடு, செல்வமும் பெருகும். நீங்கள் அரசாங்க வேலை பெறலாம், முயற்சிகளை கைவிடாமல் வேலை செய்தால் வெற்றி வந்து சேரும்.
துலாம்: நேரம் நன்றாக இருப்பதால் வேலைகள் துரிதமாக முடியும், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் மாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியான பலன்களைத் தரும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும், ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பிரபலமாகும் யோகம் உண்டு.
விருச்சிகம்: சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசியினருக்கு நல்ல பலன்களைத் தரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும். இதுவரை முடியாத காரியங்களும் சுலபமாக செய்ய முடியும். உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள், ஆரோக்கியத்திலும் கவனம் அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ